Oct 21, 2012

ஒலுவில் பிரதேசத்தில் ஒரே தடவையில் பிபட்ட 7,000 பாரை மீன்கள்: - ஒரு கோடி ரூபாய் என மதிப்பீடு
[Sunday, 2012-10-21
News Service ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலாளி ஒருவருக்கு சொந்தமான தோணிகளுக்கு ஒரே தடவையில் சுமார் 7,000 பாரை மீன்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிக்கின. ஓவ்வொன்றும் 6 முதல் 7 கிலோ கிராம் எடையுடைய இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  
இந்த பிரதேச வரலாற்றில் இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டமை
இதுவே முதல் தடவை என இங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர். சாதாரண நாட்களில் 7 கிலோகிராம் எடையுடைய பாரை மீனொன்று சுமார் 2,000 ரூபாவுக்குக் குறைவில்லாமல் விற்கப்படும் நிலையில், இன்றைய தினம் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலேயே விற்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பகுதிகளில் மிகப் பெருமளவான சூரை மீன்கள் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...