அதிஷடலாப சீட்டிழுப்பு - SMS ஐ நம்பி 98,000 ரூபாவை இழந்த நெல்லியடி இளைஞன்:
[Sunday, 2012-10-21
5 இலட்சம் ரூபா அதிஷடலாப சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாக கைத்தொலைபேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி அவ்வறிவுறுத்தலின் படி வங்கியில் 98,000 வைப்பிலிட்ட இளைஞன் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(19.10.2012) நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசிக்கு 5 இலட்சம் பணப்பரிசு சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 98,000 ரூபாவை முத்திரை வரியாக செலுத்த வேண்டும் எனவும், இந்தப் பணத்தை குறிப்பிட்ட
வங்கிக் கணக்குக்கு உடனடியாக வைப்பிலிட வேண்டும் எனவும் குறுந் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பிய அந்த இளைஞன் குறிப்பிட்ட பெறுமதிக்கு தனது நகைகளை அடகு வைத்து குறிப்பிட்ட வங்கிக் கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்டுள்ளார். அதன் பின் அவ் இளைஞன் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட போது குறுந்தகவல் விவகாரம் போலியானது என தெரிய வந்தது.
குறிப்பிட்ட கணக்கு இலக்கத்துக்கு பலர் வைப்பிலிட்டது தெரிய வந்தது. அக்கணக்கு இலக்கம் தெஹிவளையிலுள்ள வங்கி ஒன்றில் மேற்கொள்ளப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது. அத்துடன், அவ்விலக்கம் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதில் இருவரின் பணம் மாத்திரமே மீதியாக உள்ளதாகவும் ஏனைய பணங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment