பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தால், சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில், பல வணிக வளாகங்களில் அலுவலக இடங்கள் காலியாக உள்ளன. மேலும், பல பகுதிகளில் அலுவலக வாடகையும், 15-50 சதவீதம் வரை குறைந்துள்ளது.தமிழகத்தின் முக்கிய நகரங்களில், பல வணிக வளாகப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. சென்னையில், பல வளாகங்களில், ஆயிரக்கணக்கான சதுர அடி பரப்பிலான வர்த்தக இடங்கள் காலியாக உள்ளன. சென்னை, அண்ணாசாலையில், இரண்டு பாரம்பரிய திரையரங்குகளை, வணிக
வளாகங்களாக மாற்றும் பணி, திட்டமிட்டதை விட பல ஆண்டுகள் நீடித்து வருகின்றன. அவற்றுள் ஒரு வளாகத்தின் பணி, கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், பல அலுவலக இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.செலவினம்வணிக ரியல் எஸ்டேட் துறையின் இத்தகைய போக்கு குறித்து கிம் என்ஜினியரிங் செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:சர்வதேச பொருளாதார மந்தநிலை, உள்நாட்டு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், வர்த்தக இடங்களுக்கான தேவை, கடந்த ஆண்டு 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, வர்த்தக ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி, சரிவை கண்டு வருகிறது. கடந்த 2011ம்ஆண்டு, ஜூன் மாதம், வர்த்தக ரியல் எஸ்டேட் துறை 23.2 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது. இது, நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 4 சதவீதமாக குறைந்துள்ளது.பல நிறுவனங்கள், அவற்றின் செலவினத்தை குறைக்கும் பொருட்டு, நகரின் முக்கிய பகுதியில் இருந்து, புறநகர் பகுதிகளுக்கு அலுவலக செயல்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளன. ஒரு சில நிறுவனங்கள், குறைந்த வாடகை உள்ள கட்டடங்களுக்கு, இடம் பெயர்ந்துள்ளன.குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு,முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, பல பகுதிகளில் அலுவலக வாடகை சரிபாதியாக குறைந்துள்ளது.மாறும் திட்டங்கள்வர்த்தக இடங்களுக்கான தேவை குறைந்துள்ளதால், இத்துறையில் ஈடுபட்டு வந்த பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், குடியிருப்புகளை கட்டித் தரும் தொழிலுக்கு மாறி விட்டன.”கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிறுவனத்தின் கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளோம். சில காலத்திற்கு, அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டித் தரும் வர்த்தகத்தில் கவனம் செலுத்துவோம்’ என, ஆனந்த் ராஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் சரின் தெரிவித்துள்ளார்.கட்டுமான துறையில் புகழ் பெற்று விளங்கும், டீ.எல்.எப் நிறுவனம் கூட, உயர்வகை குடியிருப்பு திட்டங்களிலேயே கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.மகாராஷ்டிராஇந்நிலையில், மகாராஷ்டிராவில், வர்த்தக கட்டட தளப் பரப்பு குறியீட்டை கூடுதலாக பெற, நிர்ணயிக்கப்பட்டதை விட, 100 சதவீதம் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதனால், கட்டுமான நிறுவனங்களின் செலவினம் அதிகரித்து, புதிய வர்த்தக அலுவலகங்கள் உருவாவது குறைந்துஉள்ளது. மேலும், சென்ற ஜூன் வரையிலான காலாண்டில், முக்கிய பகுதியில் அலுவலக வாடகை, 8.3 சதவீதம் குறைந்துள்ளதாக, குஷ்மன் அண்டு வேக்பீல்டு நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.தேவைஇதே காலத்தில், டில்லி அருகே, தேசிய தலைநகர் பிராந்தியம் (என்.சி.ஆர்) பகுதியில், புதிதாக 7.25 லட்சம் சதுர அடியில், வர்த்தக இடங்கள் உருவாகியுள்ளன. இது, முந்தைய ஐந்து காலாண்டுகளில் உருவானதை விட குறைவாகும். மேலும், இது, முந்தைய காலாண்டை விட, 64 சதவீதமும், சென்ற ஆண்டின் இதே காலாண்டை விட 45 சதவீதமும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், இதே காலத்தில், வர்த்தக இடங்களுக்கான தேவையும் 30-40 சதவீதம் குறைந்துள்ளது.நடப்பாண்டு 3.30 கோடி சதுர அடி அளவிற்கே அலுவலகங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற ஆண்டு 3.50 கோடி சதுர அடியாக இருந்தது. இது, கடந்த 2007ம் ஆண்டு, மிகவும் அதிகபட்சமாக 4.20 – 4.50 கோடி சதுர அடியாக இருந்தது.டில்லி – என்.சி.ஆர்., மற்றும் மும்பையில், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், முறையே 13 மற்றும் 10 சதவீத அலுவலக இடங்கள் காலியாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment