Oct 17, 2012



 சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது


தற்போதைய கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் தெண்டுல்கருக்கு ஆஸ்திரேலி யாவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலார்ட் கூறும்போது,



இந்திய கிரிக்கெட் வீரர் தெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றார்.

ஆஸ்திரேலியா அல்லாத ஒருவர் இந்த விருதை பெறுவது அபூர்வமானது. இந்த விருதை பெறும் 2-வது இந்தியர் தெண்டுல்கர் ஆவார்.

இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொரப்ஜி இந்த விருதை பெற்றார். ஆஸ்திரேலிய மந்திரி சைமன் இந்தியா வரும்போது தெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதை பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் ஆவார்.

இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு கிளைவ் லாயிடும், 2009-ம் ஆண்டு பிரைன் லாராவும் (வெஸ்ட்இண்டீஸ்) இந்த விருதை பெற்றனர்.


தெண்டுல்கர் 190 டெஸ்ட்டில் 15,533 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...