பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த
கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன. எனவே பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூரியன்களை சுற்றிவருகின்றன. எனவே இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.
இதுவரை வானியலாளர்கள் ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இந்த புதிய கிரகம் வானியலாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
நெப்டியூனைவிட இந்த புதிய கிரகம் கொஞ்சம் பெரிய அளவில் இருப்பதாகவும் மதிப்பிட்டிருக்கிறார்கள்
No comments:
Post a Comment