இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. வரும் டிசம்பர் மாதம், புதிய குருத்வாரா மற்றும் பள்ளியை திறக்க திட்டிமிட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஏழு நிமிடங்களில் அவர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கட்டிடம் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து சீக்கிய குரூப் தலைவர் சரப்ஜித் தேஜா கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக கட்டிடம் கட்டும் பணியில் மும்முரமாக இருந்து வந்தோம். திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில், எல்லாமே எரிந்துவிட்டது என்று வேதனையுடன் கூறினார்.
சீக்கிய கோயில் செய்தித் தொடர்பாளர் பவ்னீத் சேத்தி கூறுகையில், இது உண்மையிலேயே விபத்தாக இருந்தால் மிகவும் சோகமானதுதான். அப்படியே இருக்க வேண்டும் நினைக்கிறோம். ஆனால், திடீரென தீப்பிடித்ததில் வேறு சதி ஏதாவது இருந்தால், அது பெரும் அதிர்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும் என்று சந்தேகம் கிளப்பினார். இதுகுறித்து எப்.பி.ஐ. புலனாய்வு அமைப்பு, தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்துவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சீக்கிய கோயில், பள்ளி அமைந்தால் போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் யாராவது கட்டிடத்துக்கு தீ வைத்து விட்டார்களா என்று போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் சீக்கியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment