Oct 29, 2012

வலி நீக்க வழிகள் வந்தாச்சு!


ன்றைய நவீன  மருத்துவத்தில் எப்பேர்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. குறிப்பாக வலிகளைப் போக்குவதில் பிரபலமாகி வருகிற
நவீன சிகிச்சைகள் பிரமிக்க வைக்கின்றன. மருந்துகளும் மாத்திரைகளும் ஒரு பக்கமிருக்க, வலிகளைப் போக்க வந்திருக்கிற லேட்டஸ்ட் கருவிகள் பல வருடங்களாக வலிகளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு வரப்பிரசாதமாக அமையும். வலிகளைப் போக்க அறிமுகமாகி யிருக்கும் லேட்டஸ்ட்கருவிகள் பற்றிப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

‘‘நாள்பட்ட வலிகளுக்கு, உதாரணத்துக்கு புற்றுநோய் வலிகளுக்கு, மருந்து தடவிய ஸ்டிக்கர்கள் வந்திருக்கின்றன. இவற்றை ஒட்டிக்கொள்வதன் மூலம்

தோள்பட்டை வழியே மருந்துகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு, வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

அடுத்தது நோயாளி, தன் கையோடு எடுத்துச் செல்லக்கூடிய சிறிய பம்ப். நோயாளியை படுக்கையில் இருக்க விடாமல் தைரியமாக நடமாடச் செய்ய இந்தக் கருவி உதவும். இது தொடர்ந்து தேவையான மருந்தைச் செலுத்தி, வலி நீக்கியாகச் செயல்படும். சிறிய செல்போன் அளவிலான கருவி என்பதால், அதை நோயாளி எப்போதும் தன் பாக்கெட்டிலேயே எடுத்துச் செல்லலாம்.

பிசிஏ எனப்படுகிற இன்னொரு கருவியும் ரொம்பவே லேட்டஸ்ட். கையடக்கக் கருவியான இது நோயாளிக்குத் தேவையான போது, தேவையான மருந்தை தேவையான அளவில் தானே செலுத்தும். நாள்பட்ட முதுகு வலி, அடிபட்ட கை வலி, கற்பனைத்தோற்ற வலி (கை, கால்களை நீக்கிய பிறகும் அந்த இடங்களில் உணரப்படுகிற வலி), புற்றுநோய் வலி போன்றவற்றுக்கு பிசிஏ பம்ப் மிகப் பெரிய வரப்பிரசாதம்.

இவை தவிர, மிகக் குறைந்த அளவு மருந்தை நேரடியாக தண்டுவடத்தினுள் செலுத்தக்கூடிய கருவிகளும் வந்திருக்கின்றன. இவற்றை தோளுக்கு அடியில் சிறுதுளையிட்டுப் பொருத்திவிட்டால், தேவையான அளவு மருந்து தண்டுவடத்தில் செலுத்தப்பட்டு, நாள்பட்ட வலிகளுக்குத் தீர்வளிக்கும்.

பல மருந்துகளுக்கும் சிகிச்சைகளுக்கும் குணமாகாத தீராத முதுகு வலி, கழுத்து வலிக்கு, ஸ்பைனல் கார்டு ஸடிமுலேட்டர் எனப்படுகிற கருவி நிவாரணம் தரும். இதை நோயாளிக்கு வலி உண்டுபண்ணும் தண்டுவடத்துக்கு அருகில் பொருத்த வேண்டும். இதிலிருந்து மின் அதிர்வு
களை உண்டாக்கி, மருந்தின்றி குணம் பெறச் செய்ய வைக்க முடியும். மருந்துகளால் உண்டாகக்கூடிய பக்க விளைவுகளும் தவிர்க்கப்படும்.

முதுகெலும்பு உடைந்தவர்களுக்கு ‘வெர்ட்டிப்ரோபிளாஸ்டி’ எனப்படுகிற ஊசி மூலம் மருந்தைச் செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சையும் இன்று பிரபலம். வயதானவர்களுக்கு முதுகெலும்பு உடைந்து போனால் ஆபரேஷனே தேவையின்றி, இந்த முறைப்படி உடைந்த முதுகெலும்பைப் பலப்படுத்தி, வலியைப் போக்கவும் இன்றைய நவீன மருத்துவத்தில் வழிகள் உள்ளன!’’

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...