October 4, 2012
ஒரு காலத்தில் பனடோல் போல பாவிக்கப்பட்டுவந்த அஸ்பிரின் மாத்திரைகள்
பின்னர் சிலகாலம் பாவிக்கப்படாமல் கூடுதல் பட்சம் தவிர்க்கப்பட்டும்
வந்தது.இப்போது டென்மார்க்கில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வொன்று அஸ்பிரின் மாத்திரையானது கார்ப்பப் பைமுட்டை உருவாக்க இடத்தில் இருந்து ஏற்படும் முட்டை நச்சுப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருமுட்:டை உருவாக்கும் பைகள் இரண்டு சுமார் ஒரு செ.மீ விட்டத்தில் சிறிய வால்போன்ற சதை நீளத்துடனும் கருப்பையை அண்டிக் காணப்படும்.
பெண்களின் கருவளப் பாவனையுடன் இது தொடர்புபட்டுள்ளது, கருத்தடை
மாத்திரையை நீண்ட காலம் பாவிக்கும் பெண்களுக்கு புற்று நோய்ப்பாதிப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.
வாரத்தில் இரண்டு அஸ்பிரின் வீதம் ஒரு மாதத்திற்கு பாவித்தால் கருமுட்டை நஞ்சடைவதால் வரும் புற்றுநோயை தடுக்கும் என்றும் புதிய ஆய்வு கூறுகிறது.
டென்மார்க்கில் இத்தகைய புற்றுநோய் 40 – 60 வயதுக்கு இடைப்பட்ட பெண்களை தாக்குகிறது, இதன் காரணமாக வருடந்தோறும் 600 பெண்கள் அநியாய மரணத்தைத் தேடுகிறார்கள்.
இந்த நிலையில் அஸ்பிரின் புது வழியை காட்டியுள்ளது.
No comments:
Post a Comment