Oct 6, 2012

கடல் பசு பற்றிய தகவல் !



கடல் பசு பற்றிய தகவல்கள் தமிழ் நாட்டில் பெரும்பாலும் கடல் சார்ந்த ஊர்களுக்கு மட்டும் தான் தெரியும் மற்ற நகர்புற மக்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு குறைவு தான் . ஒரு காலத்தில் இந்த கடல் பசுவை மீன் பிடிப்பவர்கள் பிடித்து விற்பனை செய்வது வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது கடல் பசுவை வேட்டியாடுவதர்க்கு தடை உத்தரவு பிறபிக்க பட்டு உள்ளது அதனால் கடல் பசுவை யாரும் இப்போது வேட்டை யாடுவது இல்லை . அப்படி மீறி வேட்டை யடுபவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்க படுகின்றன . 


பிரம்மாண்டமான ஸ்டெல்லர் கடல் பசுக்கள் (Steller's sea cow) ஒரு காலத்தில் வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ஏராளமாக இருந்தன ஆனால் இன்று இந்த உரினம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது . ஜார்ஜ் வில்ஹெம் ஸ்டெல்லர் (Georg Wilhelm Steller) என்பவர்தான் முதன்முதலில் 1741ஆம் ஆண்டு கமாண்டர் தீவுகள் பகுதியில் இப்படிஒரு மெகா பசு கடலில் மிதந்து கொண்டிருப்பது பற்றி உலகிற்கு தெரியப்படுத்தினார். அதனால் இந்த வகை கடல் பசுக்களுக்கு அவருடைய பெயரையே வைத்துவிட்டார்கள்.



இப்படி ஒரு உயிரினம் இருப்பது தெரியவந்த 27 ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் இதன் கதையை முடித்துவிட்டார்கள். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கடல் பயணம் மேற்கொண்டவர்கள் இதன் கறியை

சாப்பிட்டுவிட்டு, தோலைப் படகு செய்யப் பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு, வெண்ணைக்கு மாற்றாக இருந்ததுடன், விளக்கு எரிக்கவும் பயன்பட்டது. புகையும், வாசனையும் இல்லாமல் நீண்ட நேரம் நின்று எரிந்ததால், இதன் கொழுப்பு எண்ணெய்க்கு அந்த காலத்தில் பயங்கர கிராக்கி இருந்தது.
 
இப்படி மனிதர்களுக்கு பலவிதங்களில் பயன்பட்டதால் ஸ்டெல்லர் கடல் பசுக்கள் மின்னல் வேகத்தில் வேட்டையாடப்பட்டன. 10 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த பசுக்களால் 5 நிமிடங்களுக்கு மேல் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. அதனால் எளிதாக வேட்டைக்காரர்களின் கண்களில் சிக்கிக் கொள்ளும். சுமார் 30 அடி நீளம் உள்ள உடலை தூக்கிக் கொண்டு இவற்றால் வேகமாக நீந்தவும் முடியாது என்பதால், மிகவும் எளிதாகவே வேட்டையாடப்பட்டன.
 

இவற்றிற்கு பற்கள் கிடையாது. அதற்கு பதிலாக மேல் வரிசையிலும், கீழ் வரிசையிலும் இரண்டு தட்டையான வெள்ளை நிற எலும்புகள் இருக்கும். பொதுவாக இவை கடலில் இருக்கும் பாசி, புற்கள் போன்றவற்றையே உட்கொண்டதால், பல் என்னும் கிரைண்டர் இவற்றிற்கு தேவைப்படவில்லை. இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இன்றைய கடல் பசுக்கள் போலவே இருக்கும். இதனைப் பற்றிய ஸ்டெல்லரின் விவரிப்புகளைப் படிக்கும்போது, இது மிகவும் அமைதியான உயிரினம் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...