அமெரிக்கா உட்பட உலகின் முக்கியமான பல நாடுகளில் காணப்படும் சூப்பர் வொல்கனோ எனும் உயிர் எரிமலைகள் இதுவரை கணிக்கப் பட்டதை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லதுடன் மனித இனத்தை மிக வேகமாக அளிக்கக் கூடியன என்றும் சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ் எரிமலைகள் ஏற்படுத்தக் கூடிய ஆபத்து மிகப் பெரிய எரிகல் ஒன்று பூமியுடன் மோதினால் ஏற்படும் விளைவை விட மோசமானது என்றும் கூறப்படுகின்றது. மேலும் சுமார் 100 000 வருடங்களாக உயிர்ப்புடன் உறங்கிக் கிடக்க வல்லது என முன்னர் கருதப்பட இந்த எரிமலைகள் தற்போது 100 வருடங்கள் மட்டுமே உறங்கிக் கிடக்கும் என்று தெரிவிக்கப் படுகின்றது.இதேவேளை 2012 ஹாலிவுட் திரைப்படத்தில் காட்டப் படுவது போல் அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் எனப்படும் சர்வதேச பூங்கா வலயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சூப்பர் வொல்கனோவே உலகின் மிக ஆபத்தான எரிமலையாகும். இவ்வெரிமலை முழு வீச்சுடன் வெடித்தால் 2012 படத்தில் காட்டப்படுவது போல் அமெரிக்காவின் 2/3 பகுதியை அழித்து விடும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
கடைசியாக இடம்பெற்ற சூப்பர் வொல்கனோ வெடிப்பு 600 000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாகவும் கடந்த 2.1 மில்லியன் வருடங்களில் 3 தடவை இவ் வெடிப்புக்கள் ஏற்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தோனேசியப் பிராந்தியத்தில் 74 000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இது போன்ற எரிமலை வெடிப்பில் அப்போது துளிர் விட்டிருந்த மனித இனம் முழுவதும் அழிந்து போனதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.யெல்லோ ஸ்டோன் உட்பட நிலத்துக்கு அடியில் மக்மா எனும் எரிமலைக் குழம்புடைய சூப்பர் வொல்கனோக்களில் கிட்டத்தட்ட 100 000 முதல் 200 000 வருடங்களில் பாரிய வெடிப்பு ஏற்படும் என புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment