Nov 7, 2012

விண்டோஸ் 8-ல் புத்தம் புதிய வசதிகள்


[ செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2012,
புதிய முறையில் இயங்கி எதிர்பாராத வசதிகளை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது விண்டோஸ் 8.குறிப்பிட்ட தொடுதிரை, சதுரக்கட்ட அமைப்பு, விண்டோஸ் ஸ்டோர் போன்றவற்றை விடுத்து மற்ற சில அம்சங்களை இங்கு காணலாம்.
Antivirus
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் புதிய முறையில் ஆன்ட்டி வைரஸ் மற்றும் பாதுகாப்பு புரோகிராம் ஒன்று இணைக்கப்பட்டு கிடைக்கிறது.
Windows Defender என அழைக்கப்படும் இந்த புரோகிராம், நம் பெர்சனல் கணனியை வைரஸ், மால்வேர், ட்ரோஜன் புரோகிராம்கள் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
Battery Back up, Speed Boot up
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பெர்சனல் கணனிகள் மிக வேகமாக Boot ஆகும்படி
அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கணனி இயங்க தொடங்கும் போது, உடன் இயங்கும் Start up Programs பட்டியலை, நாம் Task Manager திறந்து சரி செய்திடலாம்.
மின்சக்தியை குறைக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனால் லேப்டாப் மற்றும் நோட்புக் கணனிகளில், டேப்ளட் பிசிக்களில் மின்சக்தி பயன்பாடு சிக்கனமாகிறது.
Windows 8 Update
தானாகவும், எளிதாகவும் கணனியில் Update செய்திட வசதி அளிக்கப்பட்டுள்ளது. இயங்குதளம் மட்டுமின்றி Application Program files-களையும் Update செய்திடலாம்.
மேலும் புதிய வசதிகள் தரும் வகையில் Files வெளியிடப்பட்டாலும், அவையும் சிஸ்டத்தில் தானாகப் பதியப்படுகின்றன.
Windows Store Application Program
விண்டோஸ் 8 Metro Application Program, மற்ற Mobile Application Program-கள் போலவே இயங்குகின்றன.
கணனி ஒன்றில் இயங்கும் Software Application Program-கள் போலவே இவற்றின் செயல்பாடுகள் உள்ளன.
விண்டோஸ் 8 சிஸ்டம் ஒன்று தான் கணனிகளிலும், கைப்பேசிகளிலும் ஒரே மாதிரியாக இயங்கும் தன்மை கொண்ட சிஸ்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Computer Mobile Games
கைபேசிகள் வந்த பின்னர் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள நபர்கள், கணனிகளை அவ்வளவாக நாடுவதில்லை.
ஆனால் விண்டோஸ் 8 மூலம், கைப்பேசிகளில் இயங்கும் Games அனைத்தும் பெர்சனல் கணனிகள், டேப்ளட் பிசிக்கள் மற்றும் அல்ட்ரா புக் கணனிகளில் கிடைக்கின்றன.
File Explorer
முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில் இதனை Windows Explorer என அழைத்து வந்தோம். இதில் தற்போது ஒரு ரிப்பன் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் Files-களை பற்றிய கூடுதல் புள்ளி விபரங்கள் கிடைக்கின்றன.
குறிப்பாக ஒரு File-யை மாற்றி கொண்டிருக்கையில் அதனைச் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைக்கலாம்.
இதுவரை நாம் File-களை கையாண்ட வழிகளுக்கும் மேலாகப் பல வசதிகள் இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...