Nov 7, 2012

ரோம்னி உருக்கம் ஒபாமாவை வாழ்த்துகிறேன்



பாஸ்டன் : அமெரிக்காவை வழி நடத்துவதில் ஒபாமா வெற்றி பெற கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று தேர்தலில் தோற்ற மிட் ரோம்னி உருக்கமாக பேசினார்.
தேர்தல் தோல்வியை ஏற்று கொண்ட குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி, பாஸ்டன் நகரில் தனது ஆதரவாளர்களிடையே பேசியதாவது:

அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசி, அவருக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். பிரசாரத்தில் தேவையான

எல்லாவற்றையும் செய்தோம். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பாக என்னால் செயல்பட முடியும் என்று உறுதியளித்தேன். மக்கள் இன்னொரு தலைவரை தேர்வு செய்துள்ளனர். அவரை வாழ்த்துகிறேன். இந்த நாட்டுக்காகவும், அவருக்காகவும் நேர்மையுடன் கடவுளை பிரார்த்திக்கிறேன். அமெரிக்கா, பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு, சிறந்த இடத்தை பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு ரோம்னி பேசினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...