வபிள்கம் சாப்பிடுபவர்களுக்கு பற்சூத்தை வராது
Saturday, 2012-11-24
|
பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது பற்சூத்தை
பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந்து,
பெரியவர்கள் வரை இந்த பிரச்சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு
பற்சூத்தைப் பற்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில்
முக்கியமானது என்னவென்றால் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடுவது.
|
அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட
நாட்கள் அவை பற்களில் இருப்பதால், பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க
ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில் துவாரங்கள்
ஏற்பட்டு, பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, வாயில்
நாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை பற்களை துலக்குவதோடு, எதை சாப்பிட்ட பின்னரும் வாயை நீரினால் கொப்பளிக்க வேண்டும். அனைவருக்குமே சில உணவுகள் பற்களுக்கு நல்லது மற்றும் சில உணவுகள் கெட்டது என்பது தெரியும். அதிலும் பற்களுக்கு போதிய சத்துக்கள் இல்லையெனில் பற்களை கிருமிகள் எளிதில் தாக்கும். ஆகவே அவற்றிற்கு பலத்தை கொடுக்கும் வகையில், நார்ச்சத்து, கால்சியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது பற்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாமல், கிருமிகளை எதிர்த்துப் போடும் சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போமா!!! இனிப்பில்லாத பழங்கள் திராட்சை மற்றும் பீச் போன்ற பழங்களை சாப்பிட்டால், அவை பற்களின் துவாரங்களில் சிக்கிக் கொண்டு, அதில் உள்ள இனிப்புகள் துவாரங்களில் தங்கி கேடு விளைவிக்கும். ஆகவே அப்போது இனிப்புகள் குறைவாக உள்ள பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். உதாரணமாக வெள்ளரிக்காயை சாப்பிடலாம். நார்ச்சத்துள்ள காய்கறிகள் மற்ற உணவுப் பொருட்களை விட சில காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும். அதிலும் கேரட், பச்சை இலைக்காய்கறிகள் போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சொத்தைப் பற்கள் ஏற்படாமல் தடுக்கும். தானியங்கள் சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் தானியங்கள் கூட பற்களுக்கு சிறந்தது. அதிலும் சொரசொரப்பான தானியங்களான கம்பு, சோளம் மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவை கூட பற்களில் ஏற்படும் சொத்தைகளை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. உலர் திராட்சைகள் உலர் திராட்சைகளில் ஒரு சில ப்ளேவோனாய்டுகள் மற்றும் போட்டோபீனால் இருப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை கட்டுப்படுத்தும். இறுதியில் எந்த சொத்தைப் பற்கள் வராமல் இருக்கும். கடல் உணவுகள் கடல் உணவுகளான இறால், கடல் சிப்பிகள் போன்றவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை பற்களை வலுவாக்கி, கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கின்றன. இனிப்பில்லாத சூயிங் கம் சாதாரணமாக சூயிங் கம் பற்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அவ்வாறு அவற்றை மெல்லும் போது வாயில் ஒருசில அமிலங்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அவை பற்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு படலத்தை உண்டாக்குகின்றன. ஆகவே அதற்கு இனிப்பில்லாத சூயிங் கம்மை சாப்பிட்டால் நல்லது. புதினா இலைகள் பொதுவாக புதினா ஒரு இயற்கை கிருமிநாசினி. ஆகவே எந்த ஒரு இனிப்புகளை சாப்பிட்டாலும், உடனே சில புதினா இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், பற்களில் கிருமிகள் தங்காமல் இருக்கும். |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment