நோயாளியாகினாலும் கவலையை விடுங்கள். உடனேயே மீண்டெழ சில வழிமுறைகள்..
|
எதிர்பாராத விதமாக மிகப்பெரிய நோய் நம் உடலில் குடியேறிவிட்டது என்றால்
அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். நோய்களை தீர்க்க
மருந்து மாத்திரைகளை அள்ளி விழுங்கும் அதே நேரத்தில் உற்சாக மனநிலையோடு
இருந்தால் நோயை எளிதில் குணமாக்கலாம் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
|
நேர்மறை எண்ணங்கள்
எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம் என்கிறார் ஆஸ்திரிய மனோதத்துவ மருத்துவரான ஆல்பிசட் ஆட்லர். இதனை நிரூபித்தும் காட்டியுள்ளார். கவலைப்படாதீர்கள் கவலையினால்தான் இதய நோய், புற்றுநோய் மட்டுமல்ல மூட்டுவலி, தலைவலி, இளமையிலேயே முதுமை, வயிற்றுக்கோளாறுகள் முதலியன வருகின்றனவாம்.உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்புங்கள். இதுவே நோய்களை குணமாக்கும் மருந்து என்கிறார் ஆல்பிசட் ஆட்லர். இதே நம்பிக்கையுடன் உங்கள் நோயையும் அகற்றும் மனதையும் அமைதிப்படுத்தும் சில உணவு மருந்துகளையும் பின்பற்றுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கவலைகளை நீக்கும் உணவுகள் நோய் பாதிப்பிற்கு ஆளானவர்கள் ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும். வாழைப்பழம், சீஸ், பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழமும், பாலும் தினமும் சாப்பிட்டு மூளைக்குக் கவலைகளைத் தெரிவிக்கும் நரம்புகளைக் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். கோபத்தை குறைக்கும் பி வைட்டமின் திடீரென்று ஒருவருக்கு கோபம் அதிகமாவது கூட கவலையான பின்னணியின் வெளிப்பாடே. வைட்டமின் பி குறைந்தாலும் எளிதில் கோபம் அதிகரிக்கும். இதனால் நரம்புகள் பலவீனமாகும். கவலைகளால் புதிய நோய்கள் உண்டாகும். எனவே இவர்கள் உருளைக்கிழங்கைத் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். அசைவம் எனில் மீன் நல்லது. இந்த வைட்டமின் மீனின் மூலம் நன்கு கிடைக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உணர்ச்சிக் கொந்தளிப்பால் சிலருக்கு உடலும் மனமும் சோர்வடையும் சிலருக்கு மூளைக்காய்ச்சல் கூட வரலாம். தயாமின் என்ற பி வைட்டமின் அதிகமுள்ள அரிசி, மீன், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அடங்கிய பொருட்களை உணவில் சேர்க்கவும். கீரை அவசியம் மக்னீசியம் குறைந்தால் உடலும் மனமும் கடும் சோதனையில் இருக்கின்றன என்று பொருள். இவர்கள் சோயா மொச்சையையும் வாழைப்பழத்தையும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். மதியம் பசலைக்கீரை அல்லது தண்டுக்கீரை சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து கிடைக்கும் மக்னீசியம் உணர்வுகளைச் சமநிலைப்படுத்தும். இதனால் நோய்களும் குணமாகும். கவலையை முறியடிக்கும் உணவுகளை தினசரி உட்கொண்டால் மன அமைதி கிடைக்கும். இதனால் பல்வேறு நோய்களும் குணமாகும். பிரச்னைகளுக்கும் நல்ல முடிவுகள் தோன்றும் என்கின்றனர் நிபுணர்கள். |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment