கணணி முன் வேலை செய்பவர்களிற்கு கண்களில் ஏற்படும் அரிப்பு, சோர்வுக்கு இயற்கை நிவாரணி
[Tuesday, 2012-12-25
|
இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம்
உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி
ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. ஆகவே
சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை
விட்டுக் கொண்டால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல்
இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும் . எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளை விடாமல், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும். |
கண்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிவரும்
கதிர்கள் தான் காரணம். எப்படியெனில் அந்த கதிர்கள் கண்களில் உள்ள நீரை
வறட்சியடையச் செய்வதோடு, எரிச்சல், அரிப்பு, சோர்வு போன்றவற்றை
ஏற்படுத்துகிறது. ஆகவே அப்போது கண்களை பாதுகாக்க, ஒருசில செயல்களை
மேற்கொண்டு வந்தால், கண்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு தடுக்கலாம்.
அது என்னவென்று பார்ப்போமா!!!
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைய கண் மருத்துவர்கள் உணவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று சொல்கின்றனர். ஏனெனில் பொதுவாக ஃபேட்டி ஆசிட்கள் கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவுகிறது. எனவே இந்த சத்துக்கள் அதிகம் உள்ள கடல் உணவுகளான் மீன்களில் சாலமன் மற்றும் ஆளி விதைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் கண்களில் வறட்சி தடுக்கப்படுவதோடு, வயிற்றில் ஏற்படும் உப்புசமும் சரியாகும். கண்களை கழுவுதல் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ரிலாக்ஸ் கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி சிறிது நேரம் உட்கார்ந்தால், கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும். இடைவேளை நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம். ரோஸ் வாட்டர் கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும். தண்ணீர் அதிகமான தண்ணீர் குடித்தால், கண்களில் எந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம். ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது, கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும். |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment