February 24, 2013
ஹன்சிகா... தமிழ்நாட்டில் தற்போது
நம்பர் ஒன் நடிகை. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிருந்தே இந்திப் படங்களில்
குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர்
ஒன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் "மாப்பிள்ளை" படத்தின் மூலம் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து
ரசிகர்கள் மனதில் ஜூனியர் குஷ்புவாக இடம் பிடித்தார். தற்போது சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாலிபன் படங்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் 8 படங்களில் நடிக்கும் ஹீரோயின்
இவர்தான்.
இது தவிர தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார். இதுவரை 21 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். நிரந்தரமா ஒரு அறக்கட்டளை தொடங்கவும் ஏற்பாடு
ஹன்சிகாவின் திரைப்பட சாதனைகள், சமூக சேவைகள் இவற்றை பாராட்டி பிரபல பெண்கள் இதழான ஜே.எப்.டபிள்யூ (ஜஸ்ட் ஃபார் வுமன்) இதழ் ஹன்சிகாவை இளம் சாதனையாளராக தேர்வு செய்து அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 1ந் தேதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்குகிறது. ஹன்சிகாவுடன் நடிகைகள் சரோஜாதேவி, த்ரிஷா, சமூக சேவகர்கள் சுஜாதா மோகன், அலமேலு வள்ளி, விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிக்கல் விஞ்ஞானி தாமஸ் ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.
No comments:
Post a Comment