ஓவ்வொரு உடற்பயிற்சியையும் 5 முறை அளவிற்கு செய்யலாம். நன்கு பழகிய பிறகு படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகாரிக்கலாம்.
* கைகளுக்குக்கான உடற்பயிற்சியில் இரண்டு கைகளையும் பக்க வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக சுழற்ற வேண்டும். இதனால் கை தோள்பட்டை வலி கையில் உள்ள சதை குறைய நல்லது.
* தோப்பு கரணம் போடுவது போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அளவிற்கு உட்கார்ந்து எழுந்திரிக்கலாம். எல்லாம் ஒரு 5 கவுண்ட் அளவிற்கு செய்யலாம். இது மூட்டு வலிக்கு நல்ல உடற்பயிற்சி.
* இடுப்பில் கை வைத்து கொண்டு நேராக நின்று கொண்டு இடது வலது புறங்களில் சுழற்றலாம். இது இடுப்பு வலிக்கு நல்ல உடற்பயிற்சி.
* தலையை மட்டும் மேலும் கீழும், இடது வலது புறங்களில் சுழற்றலாம், இது கழுத்து நல்ல உடற்பயிற்சி.
* உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதவர்கள் அப்படியே ஒரே மூச்சா வேலை செய்யாமல் இப்படி சின்ன சின்ன உடற்பயிசிகளை செய்து கொண்டே வீட்டு வேலையை செய்யலாம்.
* துணி துவைக்க கூட அடித்து துவைக்க எதிரில் கல் இருக்கும். துணி துவைக்க வாஷிங் மிஷின் தான் ஆனால் சில டோர் மேட்களை கையில் தான் துவைக்க வேண்டி வரும் , அதை நல்ல சோப்பு தண்ணீரில் ஊறவைத்து விட்டு கீழே போட்டு நாலு மிதி மிதிச்சா அழுக்கும் போகும் கால் வலிக்கும் ஒரு நல்ல உடற்பயிற்சியாகுது.
* குழந்தைகளை குளிக்க வைக்க கூட குருக்கு வலிகக் குனிந்து குளிக்க வைக்காமல் கீழே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு குளிக்கவைக்கலாம்.
* கம்பியூட்டர் முன் அரைமணி நேரத்துக்கு மேல் உட்காராதீர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். சேரில் உட்கார்ந்து கொண்டே செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.
* இரவு தூங்க போகும் போது, காலை எழுந்திரிக்கும் போது கூட எழுந்ததும் உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும். இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும்
No comments:
Post a Comment