Feb 24, 2013

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு
February 24, 2013  01:04 pm
அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

சர்வதேச சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருதுகருதப்படுகிறது. அந்த விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான 85-வது விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை காலை 8.30 மணிக்கு) லாஸ்ஏஞ்சல்ஸ்சில் நடக்கிறது. அதில், சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், டைரக்டர் இசையமைப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
 


இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதுக்கு அக்ரோ’, ‘லின்கோலின்’, ‘ஜீரோ டார்க் தர்ட்டி’, ‘ஜாங்கோ’, ‘லைப் ஆப் பைஉள்ளிட்ட படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 


அவற்றில் அக்ரோ’, ‘லின்கோலின்’, ‘ஜீரோ டார்க்தர்ட்டிஆகிய 3 படங்கள் அமெரிக்க தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள். அதில் ஜீரோடார்க் தர்ட்டி என்ற படம் தீவிரவாதி பின்லேடன் கொலை சம்பந்தப்பட்டது.

கடந்த ஆண்டு சிறந்த நடிகர், நடிகைகள் விருது பெற்ற மெரில் ஸ்ட்ரீப், ஜீன் துஜாரிடின், அக்டாவியா ஸ்பென்சர், கிறிஸ்டோபர் பிலிம்மர் உள்ளிட்டோரும் இந்த ஆண்டும் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். 


இவர்கள் தவிர கிரம்மி விருது பெற்ற இசைதுறை கலைஞர்கள் ஆடில், நூரா ஜோன்ஸ், பார்பரா ஸ்டெரிசேஸ்ட், ஷர்லி பாஸ்சி ஆகியோர் பெயரும் பரிந்துரை பட்டியலில் உள்ளது. 


ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்பவர்கள் மாலை 4 மணிக்கே விழா நடைபெறும் டால்பி தியேட்டருக்கு வருகை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த விருது வழங்கும் விழா டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்படுகிறது. 


இதை 225 நாடுகளை சேர்ந்த மக்கள் பார்த்து ரசிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...