Mar 22, 2013

ஆரோ‌க்‌கியமாக வாழ த‌ண்‌ணீ‌ர்


உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.

ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது. உடல் இளைப்பது, எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது எ‌ன்றா‌ல்
அது தண்ணீர் ‌சி‌கி‌ச்சைதா‌ன்.

த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை எ‌ன்றா‌ல் ஏதோ பு‌திய ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்று எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதுதா‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.

பலரு‌ம் சா‌ப்பாடு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ர் ப‌க்கமே‌ போக மா‌ட்டா‌ர்க‌ள். அ‌ப்படியானவ‌ர்களது உட‌‌லி‌ல் எ‌ன்னெ‌ன்ன பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தா‌ல் அவ‌ர்களது நெ‌ஞ்சே ஒரு ‌நி‌மிட‌ம் ‌நி‌ன்று ‌விடு‌ம்.

‌த‌ண்‌ணீ‌ர் ந‌ம்மை பு‌த்‌துண‌ர்‌ச்‌சியாகவு‌ம், ஆரோ‌க்‌கியமாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌கிறது. த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதை ஒரு பழ‌க்கமாக‌க் கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். நாளொ‌ன்று‌க்கு 8 முத‌ல் 10 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம். கோடை கால‌த்‌தி‌ல் இ‌ன்னு‌ம் அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம்.

அ‌வ்வ‌ப்போது த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்தை மன‌தி‌ல் ப‌திய வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் குழ‌ந்தைகளையு‌ம் அடி‌க்கடி த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வையு‌ங்க‌ள். ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் குழ‌ந்தைக‌ள் பலரு‌ம் த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக அரு‌ந்த மா‌ட்டா‌ர்க‌ள். அத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் க‌‌ழிவறையை அடி‌க்கடி பய‌ன்படு‌த்த முடியாது எ‌ன்பதுதா‌ன்.

எனவே ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலைமையை சொ‌ல்‌லி‌ப் பு‌ரிய வையு‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கு‌ம் போதுமா‌ன ‌நீ‌ர் கொடு‌த்தனு‌ப்பு‌ங்க‌ள். WD உடலை இளை‌க்க வை‌க்கவு‌ம் கூட த‌ண்‌ணீ‌ர் பய‌ன்படு‌கிறது. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினாலு‌‌ம் குறையாத உடல் எடை, அ‌திக‌ப்படியான த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதா‌ல் குறைவதை‌க் க‌ண்கூடாக பா‌ர்‌க்கலா‌ம்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடி‌த்தா‌ல் வ‌யிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடவாழத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி‌க் கொ‌ண்டு கடைசியில் உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் தேவைய‌ற்ற ‌விஷய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ண்டு வெளியேறி விடுகிறது. எனவே அ‌திகமாக‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருபவ‌ர்களு‌க்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கு‌ம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...