Mar 22, 2013

இளநீரில் என்ன சத்து இருக்கு?


இயற்கையின் கொடையான இளநீரில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெயில் காலத்துக்கு ஏற்ற இளநீர் உடலில் உள்ள வெப்பதை தணித்து  குளிர்ச்சியை தருகிறது. எனர்ஜி மிகுந்த இந்த இளநீரில் அதிகளவில் பொட்டாசியம், மினரல் உள்ளது. களைப்பை போக்கி சுறுசுறுப்பை தரக்கூடியது.  செரிமான சக்தி கொண்டது.

எனர்ஜி மிகுந்த இந்த இளநீரில் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும்  30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளது தான் காரணம். இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப்  புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடுகின்றன.

காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும்
தந்து ஊக்கமும் தரும் இனிய இயற்கை மருந்து. சிறுநீரில்  கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. இதனால் தான் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் மஞ்சள் காமாலை நோயாளிகளின்  சூட்டால் வெளியாகும் மஞ்சள் நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச் சொல்லுகிறார்கள்.

இதில் கொழுப்பு இல்லை. சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கேன்சர் வராமல் தடுக்கிறது. வைரசுக்கு எதிராக போராடும் சக்தி  கொண்டது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட இளநீரை கோடைகாலத்தில் குடித்து பயன்பெறலாமே.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...