அல்கேன் நினைவு செஸ் தொடரின் ஏழாவது சுற்றில், “உலக சாம்பியன்’ இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.
பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் அல்கேன் செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், அர்மேனியாவின் லெவான் ஆரோனியன், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ், பிரான்சின் லாரன்ட் பிரசினட் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதன் ஏழாவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், பிரான்சின் லாரன்ட் பிரசினட்டை சந்தித்தார். இந்த சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 49வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.
இஸ்ரேலின் போரிஸ், சீனாவின் லிரன் டிங்கை வீழ்த்தினார். ஏழு சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் (4 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். இஸ்ரேலின் போரிஸ் (4.5), பிரான்சின் மேக்ஸ்மீ (4), இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் (4) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மீதமுள்ள இரண்டு சுற்று போட்டிகளிலும் ஆனந்த் வெற்றி பெறும் பட்சத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.
No comments:
Post a Comment