Apr 19, 2013

லண்டனில் பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்தி வைக்கப்பட்டு இரும்புப் பெண்மணிக்கு இறுதி மரியாதை! லண்டனில் பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்தி வைக்கப்பட்டு இரும்புப் பெண்மணிக்கு இறுதி மரியாதை!

  
News Service இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், இரும்பு பெண்மணி என்று பாராட்டப்பட்டவருமான மார்கரெட் தாட்சரின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் மார்கரெட் தாட்சர் (89). தன்னுடைய உறுதியான நடவடிக்கைகள் மூலம் அவர் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டார். அவர் பதவி விலகிய பின்னர் கடந்த 23 ஆண்டுகளாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 8ம் தேதி அவர் இறந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் தேவாலய கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
  
கல்லறை வளாகத்தில், 700 வீரர்கள் அணிவகுத்து நின்று அவரது உடலுக்கு மரியாதை செய்தனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், ராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், 11 நாட்டு பிரதமர்கள், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹென்ரி கிஸ்சிங்கர், ஜார்ஜ் ஸ்கல்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லண்டன் பிஷப் ரிச்சர்டு சார்ட்ரஸ் இறுதிச்சடங்குகளை செய்து வைத்தார்.
தாட்சருக்கு மரியாதை செய்யும் விதமாக நேற்று இங்கிலாந்து முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கிவிடப்பட்டிருந்தன. மேலும், உடல் அடக்கம் நடந்தபோது, பிக்பென் கடிகாரத்தின் மணியோசை நிறுத்திவைக்கப்பட்டது. முன்னதாக, தாட்சரின் எதிர்ப்பாளர்கள், அவரது சவப்பெட்டி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாதையில் திரண்டு எதிர்ப்பு கோஷங்கள் மற்றும் கைகளை தட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...