ஜப்பானில் அடிக்கடி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியான நெமுரோ பகுதியிலும், அதனை யொட்டியுள்ள ரஷியாவின் கிழக்கு-வட கிழக்குப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியது. இது தலைநகர் டோக்கியோவில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. ஆனால் சேத விவரங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை பற்றி தகவல் வெளியாக வில்லை.
நிலநடுக்கம் நள்ளிரவுக்குப் பின் அதிகாலையில் ஏற்பட்டது. அப்போது மக்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி பீதியில் வெளியே ஓடி வந்தனர்
No comments:
Post a Comment