
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் இரண்டையும் சமாளித்து வாழும் மனிதனுக்கு வாழும் இடம் சுற்றம் தரமானதாக அமைத்துக்கொள்வது அவசியமாகிறது.
அவ்வகையில் நியூயோர்க் ஆலோசணை நிறுவனமான மெர்சர் (Mercer) ஓர் புதிய அனைத்துலக ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதாவது தரமான வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய நகரங்கள் எவை என அவ் ஆய்வு வெளிப்படுத்தியிருந்தது.
வாழ்க்கைக்கு அத்தியாவசியமான கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் போன்றவைகளை அடிப்படை காரணிகளாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அதன் முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் 2012 இன் மிகச் சிறந்த நகரங்கள் தொகுப்பின் இறுதிப்பாகம் :
3. ஆக்லாந்து, நியூசிலாந்து (Auckland, New Zealand)

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரம் ஆக்லாந்து மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது. பொறாமையூட்டும் இயற்கை அமைப்பை கொண்டிருக்கும் இந்நகர் 11 அழிந்த எரிமலைகள் மற்றும் பல தீவுகளை இரு துறைமுகங்களுக்கிடையே கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நபர்களும் உலகின் மிக பெரிய படகு உரிமைத்துவம் பெற்றிருக்கின்றனர். மேலும் நியூசிலாந்தில்தான் சிறந்த கல்வியாளர்களில் 37 சதவிகிதமானோர் இளங்கலை அல்லது அதியுயர் கல்வித் தகமையை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.
2. ஜூரிச், சுவிட்சர்லாந்து(Zurich, Switzerland)

இவ்வாண்டு சுவிஸ்சர்லாந்தின் மூன்று நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் வகிக்கின்ற. அவ்வகையில் ஜீரிச் 2வது நிலையில் உள்ளது. ஜூரிச் சுவிச்சர்லாந்து மிகப்பெரிய நகரம் அதோடு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இதற்கு புகழ்பெற்ற ஏரிகள் நிறைந்த இடங்கள் மற்றும் உருளும் மலைகள் (rolling hills) காரணம் என சொல்லப்படுகிறது.
1.வியன்னா, ஆஸ்திரியா


இறுதியாக முதல் இடத்தை பிடித்திருக்கும் நகரம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் கடந்த மூன்று வருடங்களாக முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரிய தலைநகரான வியன்னா இசைக்கு பெயர் போன நகரமாகவும் அறியப்படுகிறது. இந்நகரின் அற்புத கட்டமைப்புடனும் விளங்குகிறது. கனவுகளின் நகரம் என வர்ணிக்கப்படுவதோடு நரம்பியல் மருத்துவரான பிரபல Sigmund Freud என்பவரின் ஊரும் இதுதான். மேலும் ஐக்கிய நாடுகள் மற்றும் OPEC உட்பட, பல முக்கிய சர்வதேச அமைப்புகளை வழங்கும் நகரமும் வியன்னாதான்.
No comments:
Post a Comment