
சீனாவின் வடகிழக்கு ரஷ்ய எல்லையின் அருகே உள்ள ஹார்பின் நகரில் நடைபெரும் பனி மற்றும் ஸ்னோ விழா பிரபலமானது.
தற்போது 29வது ஆண்டு சர்வதேச பனி மற்றும் ஸ்னோ விழா ஜன 5ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெற்று பனிக்கட்டிகள் மூலம் மாளிகைகள், பிரமிடுகள் என மிகப்பெரிய அளவினான சிற்பங்கள் பலவற்றை கண்களுக்கு நல் விருந்தாக இங்கே காணலாம். இச் சிற்பங்கள் சிறப்பு LED விளக்குகள் பயன்படுத்தப்பட்டு பலவகையான நிறங்களில் ஜொலிப்பதனால் இரவில் மேலும் மெருகூட்டுடன் காட்சி தருகின்றன.

பல்வேறு நாட்டுச் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிறந்த பனிச் சிற்பங்களை இங்கே
பார்வைக்காக வைக்கப்படுவதுடன் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவருகிறது இவ் விழா. ஹார்பின் பனி நகரம் என அழைக்கப்படுவதால் இவ்விழா நடைபெருவதற்கான காலநிலையை கொண்டிருக்கிறதாம். இதில் கூடுதல் சிறப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்யக்கூடிய பனிச் சருக்கல்களும் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. கூடவே வானவேடிக்கைகளையும் அனுபவிக்க முடியும்.
இதோ குளிர்கால விந்தையுலமான ஹார்பின் நகரில் நடைபெருகின்ற பனி மற்றும் ஸ்னோ விழாவின் கூலான புகைப்படங்கள் சில










No comments:
Post a Comment