May 27, 2013


விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்!






நாம் அனைவரும் பயன்படுத்தும் விண்டோஸ் பற்றி நாம் அறியாதது பல அவற்றை பற்றி நாம் சிறிது பார்ப்போமா.
விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான்.
எந்த புரோகிராமையும், நாம் விரும் பும்போது, இணைக்கவும், நீக்கவுமான சுதந்திரத்தை விண்டோஸ் வழங்குகிறது.
அத்துடன், விண்டோஸ் பிளாட்பாரத்தில் வைத்துள்ளவற்றை, நாம் விரும்பும் வகையில் இணைத்துச் செயல்படுத்தும் சக்தியையும் நமக்குத் தருகிறது. இந்த வசதி, நமக்குச் சில குறைபாடுகளையும் தருகிறது.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எண்ணிலடங்காத ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சாதனங்களைக் கையாள்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும், அவை சார்ந்த தகவல்களைத் தேடி எடுத்து, தன்னிடத்தில் வைத்து இயக்குகிறது.
இதோ விண்டோஸ் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்....
Click Here For New Tablets And Laptops Gallery

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

இந்த தகவல் சாதனங்கள் விலக்கப்படும்போது, பயன்படுத்த முடியாத பல பைல்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விட்டுச் செல்லப்படுகின்றன.
இப்படியே பல பைல்கள் தொடர்ந்து தங்குவதால், காலப் போக்கில் புரோகிராம்களும் சாதனங்களும் செயல்படுவதற்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

இதனால், விண்டோஸ் சிஸ்டத்தின் செயல்வேகம் மந்தப்படுத்தப் படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமானால், டேட்டாவினை ஸ்டோர் செய்வதிலும், பைல்களை நீக்குவதிலும் நாம் சில வழிமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

டிஸ்க்கில் பைல் ஒன்று எழுதப்படுகையில், அதன் முன்போ, பின்புறமோ இடம் விடப்படாமல், தொடர்ந்து எழுதப்படுகிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

அது நீக்கப்படுகையில், முதல் நிலையில், அந்த பைல் அழிக்கப்படாமல், அந்த இடத்தில் வேறு பைலை எழுதிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தரப்படுகிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

வேறு ஒரு பைலை அதில் எழுதுகையில், பைலுக்கான இடம் போதுமானதாக இல்லை என்றால், மீதப் பைல் வேறு ஒரு இடத்தில் எழுதப்படுகிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

பைலின் ஒரு பகுதி வேறு இடத்தில் இருப்பதனை, முதல் பகுதியின் இறுதியில் எழுதி வைக்கப்படுகிறது. என்.டி.எப்.எஸ். பைல் சிஸ்டம், இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வினைக் கண்டது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

தொடர்ந்து இடம் இருந்தால், அந்த இடத்திலேயே எழுதும் வகையில் இந்த சிஸ்டம் அமைக்கப்பட்டது. இருப்பினும், பலவகை பார்மட்களிலும், அளவுகளிலும் பைல்கள் உருவானதால், இந்தப் பிரச்னை தொடர்கிறது.
ஒரு பைல் பல இடங்களில் எழுதப்படுவதால், பைல் படிக்கப்படும்போது, அதிக நேரத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டம் எடுத்துக் கொள்கிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இயக்கப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள், அமர்ந்து செயல்படும் இடமே ராம் மெமரி. இவற்றிற்கு அதிக இடம் தேவைப்படுகையில், இதன் இட அளவு மிகவும் குறைவாக இருப்பதே, பிரச்னைக்கு இடமாக அமைகிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றுக்கு, அதிக இடம் தேவைப்படுகையில், இதனை நிர்வகிக்கும் Virtual Memory Manager VMM, ராம் மெமரியில் இடம் உள்ளதா என ஸ்கேன் செய்து, இல்லாத நிலையில், அந்த புரோகிராமினை ஸ்வாப் பைல் என்ற முறையில் ஹார்ட் டிஸ்க்கில் இயக்குவதற்காகப் பதிகிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

இது போல வெளியில் புரோகிராம்கள் எழுதப்படுவதனால், விண்டோஸ் அதிக நேரம் எடுத்து செயல்படத் தொடங்குகிறது. இது செயல் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

தற்காலிக டேட்டாவினை ஸ்டோர் செய்திட, விண்டோஸ் இயக்கத்திற்கு ஹார்ட் ட்ரைவில் இடம் தேவைப்படும். இதற்கான இடம் கிடைக்காத போது, விண்டோஸ் சிஸ்டம் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகள் ஒன்றுமே செயல்பட இயலாத நிலை ஏற்படுகிறது.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

Malicious Software என்பதன் சுருக்கமே மால்வேர் (Malware) ஆகும். வைரஸ், அட்வேர் அல்லது வோர்ம் என அழைக்கப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களே மால்வேர் எனப்படும்.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

இவை, நம் அனுமதியின்றி கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டு, சிஸ்டத்தின் திறனைத் திருடிக் கொள்ளும். மற்ற சாப்ட்வேர் போலவே இவையும் இயங்குவதால், சிஸ்டத்தின் செயல்திறன் மட்டுப்படுத்தப்படும்; சில வேளைகளில் முடக்கப்படும்.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

மேலும் ஹார்ட்வேர் சாதனங்களினால், கிடைக்கும் பிரச்னைகளை இன்னதென நாம் உடனே அறியமுடியாது.
ஹார்ட்வேரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது பல பிரிவுகளை இயக்கும் ட்ரைவர் புரோகிராம்களுக்கிடையே ஒத்திசைவு இல்லாத நிலை ஏற்படலாம்.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

சி.பி.யு, பவர் சப்ளை மற்றும் கிராபிக்ஸ் கார்ட்களை, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, கம்ப்யூட்டரில் சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருக்கும். இவை செயல்படாத நிலையில், உள்ளே உருவாகும் வெப்பம், கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை முடக்கும்.

கிராபிக்ஸ் கார்ட் தனக்கான மெமரியை, ராம் மெமரியுடன் பகிர்ந்து கொள்ளும்.

விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்

எனவே, கிராபிக்ஸ் கார்டின் முழு திறனும் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை இயக்குகையில், ராம் மெமரி பாதிக்கப்பட்டு, செயல்வேகம் தடை படுகிறது. இதற்குத் தீர்வாக, தனக்கென மெமரி கொண்டுள்ள, கிராபிக்ஸ் கார்டினை இணைப்பதே சிறந்தது.



Topics: news Computer
Story first published:  Monday, May 27, 2013, 11:23 [IST]


  • விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள்!நாம் அனைவரும் பயன்படுத்தும் விண்டோஸ் பற்றி நாம் அறியாதது பல அவற்றை பற்றி நாம் சிறிது பார்ப்போமா. விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். எந்த புரோகிராமையும், நாம் விரும் பும்போது, இணைக்கவும், நீக்கவுமான சுதந்திரத்தை விண்டோஸ் வழங்குகிறது. அத்துடன், விண்டோஸ் பிளாட்பாரத்தில் வைத்துள்ளவற்றை, நாம் விரும்பும் வகையில் இணைத்துச் செயல்படுத்தும் சக்தியையும் நமக்குத் தருகிறது. இந்த வசதி, நமக்குச் சில குறைபாடுகளையும் தருகிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எண்ணிலடங்காத ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சாதனங்களைக் கையாள்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும், அவை சார்ந்த தகவல்களைத் தேடி எடுத்து, தன்னிடத்தில் வைத்து இயக்குகிறது. இதோ விண்டோஸ் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்.... Click Here For New Tablets And Laptops Gallery விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள் 1/17 விண்டோஸ் பற்றிய அறியாத தகவல்கள் இந்த தகவல் சாதனங்கள் விலக்கப்படும்போது, பயன்படுத்த முடியாத பல பைல்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விட்டுச் செல்லப்படுகின்றன. இப்படியே பல பைல்கள் தொடர்ந்து தங்குவதால், காலப் போக்கில் புரோகிராம்களும் சாதனங்களும் செயல்படுவதற்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...