May 27, 2013

யூடியூப்பில் தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கான இலகுவழி!

Private Videos ,Country Blocked Videos உலகில் தினமும் மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்படும் முதல்தர வீடியோ பகிர்வு தளம் என்றால் அது Youtube தான். கணக்கிலடங்காத வீடியோக்கள் இந்த தளத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதில் அனைத்து வீடியோக்களையும் எல்லோராலும் பார்க்கமுடியுமா என்றால், இல்லை என்பதே பதில். இதில் இரண்டுவகையான வீடீயோக்கள் அனைத்து மக்களாலும் பார்க்கமுடியாது இருக்கும்.

Private Videos ,Country Blocked Videos என இருவகை இருக்கிறது. இதில் Private Videos ஐ பார்ப்பது கடினம். ஆனாலும் அதற்கு ஒரு வழி இருக்கிறது. அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்போது Country Blocked Videos ஐ எப்படி பார்வையிடுவது என்று பார்ப்போம்.
Youtube இல் நீங்கள் சில வீடியோக்களை பார்க்கும்போது “The Uploader has not made this video available in your country” என்ற தகவல் வந்திருக்கும். இதற்கான காரணம் அந்த வீடியோவை Upload செய்தவர் அதை குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே பார்க்கக்கூடியவாறு செய்திருப்பார். அந்த நாடுகளை தவிர வேறு நாடுகளில் இருப்பவர்கள் அவ் வீடியோவை பார்க்கமுடியாது.

ஏன் Block செய்கிறார்கள் ?
சில வீடியோக்கள் குறிப்பிட்ட சில நாடுகளிலேயே ஒளிபரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் ( Copyright ). அவ்வாறு ஒளிபரப்ப அனுமதி இல்லாத நாடுகளில் இவ்வாறு பார்ப்பதற்கு தடை செய்யப்படுகிறது. உதாரணமாக BBC யின் “Stop Calling it a Honeymoon! - Gavin and Stacey - BBC Three”என்ற வீடியோவை அவர்களது நாட்டில் மாத்திரம் ஒளிபரப்புவதற்கான அனுமதியை BBC வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளில் இந்த வீடியோவை பார்க்கமுடியாது.
இப்படியான வீடியோக்களை பார்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது வழி மிகவும் இலகுவானது. அதாவது அந்த வீடியோவிற்குரிய URL இல் சிறிய மாற்றத்தை செய்யவேண்டும். உதாரணமாக வீடியோவிற்கான URL கீழ்கண்டவாறு இருக்கும்.

http://www.youtube.com/watch?v="F4P3j8dh2ro
இதில் watch?v= என்பதை v/ என Replace செய்யவேண்டும். Replace செய்தபின்னர் URL கீழ்க்கணடவாறு இருக்கும்
http://www.youtube.com/v/F4P3j8dh2ro
இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் உங்களால் தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்க்கக்கூடியதாக இருக்கும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...