Oct 13, 2014

தேங்காயின் பலன்கள் என்ன?


Our life is meant to be attached to the coconut. However, we are fully aware of its specialties. Here ... terincikkunka about the virtues of coconut ...தேங்காய் நம் வாழ்வில் ஒன்றி இருக்கும் பொருள். ஆனாலும் அதன் சிறப்பு பற்றி நமக்கு முழுமையாக தெரிவதில்லை. இதோ... தேங்காயின் சிறப்புகள் பற்றி தெரிஞ்சிக்குங்க...

தேங்காயை உணவு சம்மந்தமாக மட்டும் இல்லாமல் அழகு சாதனமாகவும் பயன்பாட்டில் உள்ளது. கேரளா மற்றும் தாய்லாந்தில் தேங்காய் இல்லாத உணவு இருக்காது. இதில் பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா, பங்கஸ், வைரஸ் கிருமிகள் மற்றும் வயிற்று பூச்சிகளை அழிக்கும் தன்மையுடையது. தினமும் ஒரு சின்ன துண்டு தேங்காய் சாப்பிடுவது நல்லது. தேங்காயில் வைட்டமின், மினரல், அமினோ ஆசிட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


மேலும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்களும் உள்ளன. பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு தேங்காய் ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள நார்சத்து, சாப்பிடும் உணவை எளிதில் ஜீரணமாக்கும். காழுப்பு உடலில் தங்காமல் பாதுகாக்கும். தேங்காயில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவும். தேங்காய் மட்டும் இல்லாமல் அதன் நார் மற்றும் ஓடுகளும் மிகவும் பயனுள்ளவை. இதை சாம்பிராணி போட பயன்படுத்துவதால், வீட்டில் கொசு தொல்லை மற்றும் துர்நாற்றம் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

தேங்காய் எண்ணை நம் முன்னோர் காலம் முதல் அழகு சாதனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தலையில் தேங்காய் எண்ணை தடவுவதால், முடி கொட்டுவது, பொடுகு போன்ற பிரச்னை ஏற்படாது. குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணையால் உடலை மசாஜ் செய்வதால், எலும்பு வலுவாக இருக்கும். முகத்தில் தடவி வந்தால், சருமம் பொலிவடையும். நீங்களும் தரமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம். அதற்கு, தரமான கொப்பரைகளை தேர்வு செய்து நன்கு காய வைக்க வேண்டும்.

கொப்பரை 12 இஞ்ச் தடிமனாக இருக்க வேண்டும். அப்போது தான் தரமான வாசனையான எண்ணை எடுக்க முடியும். முதலில் கொப்பரையை காயவைத்து, துண்டுகளாக்கி, பின் அரைக்க வேண்டும். தற்போது எல்லாம் இயந்திரமயம் என்பதால், எண்ணை எடுப்பது மிகவும் சுலபம். சுத்தமான தேங்காய் எண்ணை வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை ரீபைன் செய்வதன் மூலம் சுமார் 2 வருடம் கெடாமல் இருக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...