Oct 13, 2014

இருமலை குணப்படுத்தும் துளசி



The main character of Tulsi in the cooling caused by cough syrup nikkuvatutan kapattai. Although the name is variously spelled, natureஇருமல் சிரப்புகளில் துளசியின் முக்கிய குணம் குளிர்ச்சியால் ஏற்படும் கபத்தை நீக்குவதுதான். பெயரில் பலவாறாக இருந்தாலும், குணத்தில் அனைத்து துளசிகளும் ஒரே செயலைத்தான் செய்கின்றன. கோவில்களில் செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரில் துளசியை போட்டு வைத்து, அந்த நீரை துளசியுடன் சேர்த்து பிரசாதமாக வழங்குவார்கள். துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். திருத்துழாய் என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கபம் சம்பந்தமான நோய்கள் மட்டுமின்றி, ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு
போன்ற குளிர் சம்பந்தமான நோய்களும் இந்த துளசியால் விடைபெற்று செல்லும். முக்கியமாக இளம்பிள்ளை வாதம் நோய் எட்டிப்பார்க்காமல் இருக்க துளசியானது அருமருந்தாக உள்ளது. இந்துக்களின் வைணப்பிரிவின் மிக உயர்ந்த போற்றுதலுக்கும், பூஜைக்கும் தீர்த்தமாக பெருமாள் கோயில்களில் துளசி பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் பயிராகும் ஒரு மணமுள்ள செடி துளசி. 2 முதல் 3 அடி வரை வளரும்.

துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, செந்துளசி, நாய் துளசி, நீலத்துளசி, முள்துளசி, கல்துளசி, சிறுதுளசி, நல்துளசி, கற்பூர துளசி உள்பட பல வகை துளசிகள் உள்ளன. துளசியை பயன்படுத்தினால் கபம், இருமல், மூக்கில் நீர் வருதல், நீர்வேட்கை (தாகம்) எலும்பை பற்றிய சுரம், மந்தம், சுவையின்மை, கணச்சூடு இரைப்பு, கோழை, மார்புச்சளி நீங்கும். இலையை நீரிலிட்டு அந்நீரை அருந்தலாம். தண்ணீர் சேர்த்து காய்ச்சி வியர்வை பிடிக்கலாம். இலையை பாலிலிட்டு காய்ச்சி உண்ணலாம். இலையை உலர்த்தி பொடி செய்து உண்ணலாம். பொடியை நசியமிடலாம்.

துளசி விதையை நீரில் அரைத்து சாப்பிட்டு வந்தால் மண்குத்திநோய்க்கு சிறந்த மருந்தாகும். அதாவது, குழந்தை பிறந்த பின் வரும் அடிவயிற்று குற்றலுடன் உண்டாகும் வலிக்கு துளசி மிகுந்த நன்மை தரும். முள்துளசியை எலிகடித்த இடம், எலி கடித்தபின் பின்னாளில் வரும் இளைப்பு, இரைப்பு நஞ்சு தீரும். தற்போது வரும் இருமல் சிரப்புகளில் துளசி பெருமளவு சேர்க்கப்படுகிறது.

குழந்தைகளின் வயிற்று வலி தீர, காது சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த, களைப்படைந்த மூளைக்கு சுறுசுறுப்பளிக்க, இருதய நோய்க்கு, ஆஸ்துமா மற்றும் மார்பு சம்பந்தமான நோய்க்கு, உடல் துர்நாற்றம் மறைய, நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக, தீராத தலைவலி தீர, வெயில் காலத்தில் வரும் கண் கட்டி குணமாக, உள்நாக்கு வளர்ச்சியை தடுக்க என அனைத்து நோய்களுக்கும் துளசியை பயன்படுத்தினால் நம்மை பாதுகாக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...