கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, அவற்றில் ஒரு வகை தான் மணத்தக்காளி கீரை.
இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம்
போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது.
மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு
1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது.
* வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி
கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
* மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
* மேலும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதுடன், இப்பிரச்னையும் நீங்கிவிடும்.
* காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை சாப்பிடுவது நல்லது.
* சருமத்தில் ஏதேனும் அலர்ஜி, உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகள் உள்ள இடத்தில் மணத்தக்காளி சாற்றினை தடவினால் விரைவில் குணமாகும்.
* மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல்
பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் இக்கீரையை உணவில்
கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதனை காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு இதயமும் வலிமையடையும்.
No comments:
Post a Comment