Apr 11, 2015

இதயத்தைக் காக்கும் காளான்


mushroomsகாளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.
காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக இரத்த அழுத்தத்தையும், இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பையும் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கிறது. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும்
கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
வலிப்பு, மூளை நோய், வலிமைக் குறைவு, மஞ்சள்காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோர்த்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது.
அவ்வப்போது காளான் சூப் பருகுவதன் மூலம் பெண்களுக்கு கருப்பைப் பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும். தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும்.
மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். காளான் சூப் தயாரிப்பதைப் போல காளான் குழம்பும் வைக்கலாம். இதுவும் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் காளான் குழம்பு சாப்பிடுவது மிகவும் நல்லது. தாம்பத்திய உறவு பிரச்சினை, முதுமைத் தளர்வு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.
காளான் குழம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துவிடலாம். இதயத்தைக் காத்துக்கொள்ள விரும்புபவர்கள் காளானை உணவில் சேர்க்க வேண்டு;ம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...