Apr 11, 2015

நீரிழிவு நோயால் அவதியா? கோவைக்காய் சாப்பிடுங்கள்


கோவைக்காய்சமையலுக்கு பயன்படுத்தும் கோவைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இவற்றின் தண்டு, கனிகள், இலைகள், வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
கோவைக்காயின் பழங்கள் சிவப்பு நிறமுடையவை, இவற்றை உண்டால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்
கோவைக்காய் சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு, சீரகம், இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து உண்ண வேண்டும்.
இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று
உண்டால் வாய்ப்புண் ஆறிடும்.
வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை உண்ணலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
சரும நோய்க்கு மருந்தாகும்
கோவை இலையானது இருமல், வாதநோய், பெருவிரணம், சிறு சிரங்கு, உடல் சூடு, நீரடைப்பு போன்றவற்றை நீக்கும்.
கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க உடல்சூடு, சொறி சிரங்கு, நீரடைப்பு, இருமல் நீங்கும்.
இலையை காயவைத்து பொடி செய்து, மருந்தாக கொடுத்தாலும் இந்த நோய்கள் நீங்கும்.
கோவை இலையை எண்ணெயில் கொதிக்க வைத்து படை, சொறி, சிரங்கு போன்றவைக்கு பூசலாம் சருமநோய்கள் குணமாகும்.
நீரிழிவு மற்றும் தோல் நோய்களுக்கு தீர்வு
பண்டைய காலத்திலிருந்தே, கோவைக்காய் நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று.
கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவதில்லை, நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும். மேலும் தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் நல்ல மருந்தாகும்.
கோவை இலைச் சாறு, பித்தம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...