தேவையான பொருட்கள்:
நிலக்கடலை-1கப்
முந்திரி-5
ஏலக்காய்-சிறிதளவு
செய்முறை:
நிலக்கடலைப் பருப்பை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவும்,
பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
இத்துடன் ஊறிய முந்திரிப் பருப்பை சேர்க்கவும்.
பின்பு இவைகளுடன் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான நிலக்கடலைப்பால் தயார். இதை உணவாகப் பருகலாம்.
மருத்துவக் குணங்கள்:
மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.
ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட













































0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா