புரத உணவுச்சத்து மிகவும் முக்கியமானது. முக்கியமாக வளரும் பருவத்தினருக்கும், நோய் குணமாகி உடல் தேறி வருபவர்களுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியவர்களுக்கும் இந்த உணவுச்சத்து மிகவும் அவசியமானது.
உடல் திசுக்களின் கட்டுமானத்திற்கும், தோல் எலும்புகள் மற்றும் தசைகளின் பழுது பார்ப்பிற்கும், உடலுக்கு அடிப்படை பலத்தை வழங்குவதற்கும் புரதம் தேவைப்படுகிறது.
புரத உற்பத்திக்கு சுமார் 23 வகையான அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன. இவற்றுள் 15 அமினோ அமிலங்களை நம்முடைய உடலே உணவிலுள்ள வேறு பொருட்களிலிருந்து தயாரித்து கொள்கிறது. மீதமுள்ள வேறு பொருட்களிலிருந்து தயாரித்து கொள்கிறது.
மீதமுள்ள 8 அமினோ அமிலங்களையும் நம்முடைய உடலினால் தயாரிக்க முடியாது. எனவே
இவை தயார் நிலையில் நம்முடைய உடலுக்கு தேவைப்படுகின்றது.
பால்
பால்
மக்காச்சோளம்
மக்காச்சோளம்
முட்டை
முட்டை
புரத உணவுகள்:
நமது உணவிலுள்ள புரதங்கள் உடலினால் கிரகிக்கப்பட்டதும் அவை அமினோ அமிலங்களாக சிதைக்கப்பட்டு நம்முடைய உடலுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்வதற்கு அந்த அமினோ அமிலங்கள் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன.
ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு அவருடைய உடல் எடையில் ஒவ்வொறு கிலோ கிராமிற்கும் ஒரு கிராம் வீதம் ஒவ்வொறு நாளும் புரதம் தேவைப்படுகிறது.
வளரும் பருவத்தினருக்கு உடல் எடையில் ஒவ்வொறு கிலோ கிராமிற்கும் 2 கிராம் வீதம் தினமும் புரதம் தேவைப்படுகிறது.
பால், கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், மக்காச்சோளம், சோளம், இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றில் அதிக அளவில் புரதங்கள் இருக்கின்றன.
இவை அனைத்தும் ஒவ்வொறு 30 கிராம்களுக்கும் சதவீதங்களில் உணவு பொருள்களின் மதிப்புகள் ஆகும்.
No comments:
Post a Comment