May 5, 2012

உணவுகளின் மதிப்புகள்



நோய்கள் இல்லாமல் அல்லது குறைபாடுகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இயங்கி வரும் உடல் தான் ஆரோக்கியமான உடல் என்று உடல் ஆரோக்கியத்திற்கு பொதுவான விளக்கம் அளிக்கலாம்.

    வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குரைகளும் சம நிலையில் இருக்கும் உடல் தான் ஆரோக்கியமான உடலாக கருதப்படும். இந்த மூன்றும் தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் இவற்றுள் ஒன்று அல்லது பல இயல்பு நிலை திரிந்து கூடுவதாலோ அல்லது நம்முடைய பழங்கால மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
    கபம் தலை மற்றும் கழுத்து வரையிலும், பித்தம் தொண்டையிலிருந்து இடுப்பு வரையிலும், வாதம்
அதற்கு கீழும் நிலை பெற்றால் உடல் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்.
    கபம் மார்புக்கு இறங்கினால் ஒருவர் கபம் சம்பந்தமான தொந்தரவுகளினால் பாதிக்கப்படுவர். அதுபோலவே மற்ற  குறைகளும் அவற்றின் இயல்பு நிலையிலிருந்து திரியும் போது அதன் விளைவாக நோய் ஏற்படுகிறது.

உணவு
    உணவு

உடற்பயிற்சி
    உடற்பயிற்சி

தூக்கம்
    தூக்கம்



அடிப்படை தேவைகள்:

    உடல் ஆரோக்கியத்திற்கு பொதுவாக உணவு, உடற்பயிற்சி, தூக்கம், சுயக்கட்டுப்பாடு ஆகியவை அடிப்படை தேவைகளாக இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது.
    நீங்கள் முறையான உணவு உட்கொள்ளவில்லையெனில் உங்களுடைய தூக்கம் பாதிக்கப்படுகிறது.
    நீங்கள் போதுமான அளவில் உடற்பயிற்சி செய்யவில்லையெனில் உணவு உட்கொள்வது குறைகின்றது.
    இதுபோலவே இந்த அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாக இருக்கின்றது.

உணவு:

    உணவு மனித உடலுக்கு முக்கியமான அடிப்படை தேவையாக விளங்குகிறது. உணவில் புரதங்கள், தரசங்கள், வைட்டமின்கள், கொழுப்புகள், தாது உப்புகள் ஆகியவை போதுமான அளவில் இருக்க வேண்டும். சரிவிகித அளவிலும் இருக்க வேண்டும். இந்த உணவு சத்துக்கள் தான் உணவை ஊட்டம் நிறைந்ததாக ஆக்குகின்றன.

உடற்பயிற்சி:

    உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் உடற்பயிற்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. முக்கியமாக உடற்பயிற்சி உடலை நெகிழ்ச்சியுடையதாக வைத்திருக்கவும், உணவு ஜீரணமாவதிலும் உதவுகின்றது.

தூக்கம்:

    உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் தூக்கமும் முக்கியப்பங்கு வகிக்கின்றது. நாம் உட்கொண்ட‌ உணவு ஜீரணமாவதற்கும், ஜீரணமான உணவுச்சத்துக்கள் உடலால் கிரகிக்கப்பட்டு தன்மயமாக்கப்படுவதற்கும், பகல் முழுவதும் உழைத்து களைத்த உடல் களைப்பு நீங்கி புத்துணர்வையும், புதிய ஆற்றலையும் பெறுவதற்கும் தூக்கம் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
    தூக்கம் ஒருவருடைய உடல் ஆரோக்கியத்திற்கும், உயிர்ப்புத்திறனுக்கும் அளவுகோலாக இருக்கிறது. தூக்கம் இல்லாமல் போவது ஒருவருடைய உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான அடையாளமாக விளங்குகிறது. தூக்கத்தின் தேவை ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன என்ற போதிலும், தூங்கி விழிக்கும் போது ஒருவர் புத்துணர்வாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக உணர்வது தான் முழுமையான தூக்கம் ஆகும்.

சுய கட்டுப்பாடு:

    உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் சுய கட்டுப்பாடு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதை பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ள‌வில்லை. உண்மையில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அவசியமான காரணிகளில் சுய கட்டுப்பாடு தான் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஏனெனில் சுய கட்டுப்பாட்டின் மூலம் தான் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அவசியமான மற்ற மூன்று காரணிகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.
    எவ்வளவு சாப்பிடுவது, எவ்வளவு நேரம் தூங்குவது, எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வது என்பனவெல்லாம் ஒருவருடைய சுய கட்டுப்பாட்டில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
    உதாரணமாக சுய கட்டுப்பாடு இல்லாத ஒருவர் ஏதாவது ஒரு உணவு சத்தை மட்டும் அளவிற்கதிகமாக சாப்பிட்டும், போதிய நேரம் தூங்காமலும், உடற்பயிற்சியே செய்யாமலும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான இந்த அடிப்படை தேவைகளை பற்றி நன்கு புரிந்து செயல்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...