May 22, 2012

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது.  பித்தமானது பல காரணங்களால்  மிகுதியாகி  ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.  உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.
உள்ஜுரம் ஜுரத்தா லெழும்பி
உதித் தெழும் பித்த தோஷம்

என்று அகத்தியர் பெருமான் அகத்திய வர்ம காண்டத்தில் கூறியுள்ளார்.
இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது.    இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.
மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது.  சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.
பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்  சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு.  ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை  ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது  மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.
பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
கீழாநெல்லி         – ஒரு கைப்பிடி
சீரகம்        -  1 ஸ்பூன்
இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில்  சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.
· காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
· பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
· வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
· நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
· மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.
· புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
· நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
இன்றைய நவீன யுகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிக்குச் செல்லும் நிலை வந்துள்ளது.
போதிய கல்வியறிவு, எத்தகைய செயல் களையும் திறம்பட முடிக்கும் தன்மை பெண்களுக்கும் உண்டு என்பதை தற்போதுதான் ஆணாதிக்க சமூகம் உணரத் தொடங்கியுள்ளது.
பொருளாதார சூழ்நிலையில் இன்று ஆண், பெண் இருவரும் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் தற்போது உள்ளது..
இத்தகைய சூழலில் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்து வேலைக்குச் செல்லும் நிலையில் பல உடல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.
பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக் குறைபாடுகள் உண்டாகிறது.  இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது.
இதனால்தான் நம் முன்னோர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்கவைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து வந்தனர்.  மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர்.  ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது.  மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின்போதே உண்கின்றனர் , அல்லது பட்டினி கிடக்கின்றனர்.  போதிய உணவு உண்ண நேரமின்மை, காலந்தவறிய உணவு, அவசர அவசரமாக உண்ணும் நிலை இவற்றால் பெண்களுக்கு குடலில் புண் உண்டாகிறது.
இதனால் பித்தம் அதிகரித்து அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.  மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.
இத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு அவசியத் தேவையாகும்.  அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல.  அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவை.
இவர்கள் உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும்.  முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த சூப் செய்து அருந்தலாம்.
மணத்தக்காளிக் கீரை    – 1 கைப்பிடி
ஆரைக்கீரை        – 1 கைப்பிடி

கொத்தமல்லி    – 1 கொத்து
கறிவேப்பிலை    – 2 இணுக்கு
சின்ன வெங்காயம்    – 3
பூண்டு        – 2 பல்
இஞ்சி        – 1 துண்டு
காரட்        – 1
புதினா        – சிறிதளவு
சீரகம்        – 1 ஸ்பூன்
மிளகு        – 5
சோம்பு        – 1 1/2 ஸ்பூன்
இலவங்கப்பட்டை    – 1
இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து வாரம் இருமுறை சூப் செய்து அருந்தி வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மலரும் மருத்துவமும் தாமரை…

புல் பூண்டு, செடி, கொடி, மரம் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.  இவை பருவ காலத்திற்கும் வளரும் பகுதிக்கேற்பவும் அவற்றின் குணங்கள் சிறிது மாறியிருக்கும்.
இவ்வாறு மனிதர்களுக்கு பயன்படுபவையில் மலர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை.  இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது.  இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும்  அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர்.  தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு.
தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil    – Thamarai
Sanskrit    – Padma
English    – Lotus
Telugu    – Tamara
Malayalam    – Thamara
Botanical Name     – Lelumbo nucifera
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்
ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்
கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில்
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்

-அகத்தியர் குணவாகடம்
பொருள் – வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும்.  தேக எரிச்சல் நீங்கும்.
தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை  வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.
நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.
சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும்.  மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.
வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  சரும எரிச்சலைப் போக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும்.  இதய தசைகளை வலுப்படுத்தும்.  இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.
வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.  நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.
தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.  காது கேளாமை நீங்கும்.  ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.
மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும்.  அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான  பாதிப்பு குறையும்.
தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில்  தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.
தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..
இந்த  பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி..
அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்…?
உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு.  இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது என்று தெரிந்துதான் நம்மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்து நாட்டைப் பிடித்தார்கள்.
தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.
உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.  இந்த மிளகு இந்தியாவிற்கு மிகுந்த அன்னிய செலாவணி ஈட்டித் தருகிறது.
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.
நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.  வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.  வயிற்றில்   சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.  மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது.  இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது.  மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.  இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.
இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள்.  வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.
Click Here

எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர்.   அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று.  இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.
உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.
புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.
உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.
1. பரோடிட் சுரப்பி
2. சப்மாண்டிபுலர் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி
இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.  இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன.  இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர்.  இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.
சப்மாண்டிபுலர் சுரப்பி
இது பரோடிட்  சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது.   இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.
சப்லிங்குவில் சுரப்பி
கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன.  இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது.  இது அதிக என்ஸைம்களைக் கொண்டது.  இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது.  இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது.  இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..
உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.
உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல்  வாழலாம்  என்று கூறுகின்றனர்.
உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது.   மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.
பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை
தமிழ் மக்களின் உணர்வோடும் உள்ளத்தோடும் கலந்த விழாதான் பொங்கல் திருவிழா.
கடவுள் எனும் முதலாளி.. கண்டெடுத்த தொழிலாளி..
எனப் போற்றப்படும் விவசாயி தங்களின் உழைப்பால் நிலத்தைத் திருத்தி ஆழ உழுது நெல் பயிரிட்டு வளர்த்து அறுவடை செய்த பின் தனக்கு உதவியாக இருந்த இயற்கையை வழிபட்டு

பித்தமே மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா இவற்றை சீராக இயக்கும் சக்தி


இத்தகைய சிறப்பு வாய்ந்த செயல்களைச் செம்மைப்படுத்தி உடலை இயங்கவைக்கும்  பித்தமானது உடலில் பல பாகங்களில் இருந்துகொண்டு மேற்கண்ட செயல்களை நிறைவேற்றுகிறது.  இதன் செயல்பாடுகள், இருக்குமிடம் ஆகியவற்றைக் கொண்டு ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அவற்றின் இயக்கம் மற்றும் தன்மை பற்றி தெளிவாகக் கூறியுள்ளனர் சித்தர்கள்.
அவை பாசகம், இரஞ்சகம், சாதகம், பிரகாசம், ஆலோசகம் என்பவையாகும்.
கடந்த இதழ்களில் பாசகம், இரஞ்சகம் என இருவகைப் பித்தத்தின் செயல்பாடுகளை விரிவாக அறிந்தோம்.
இந்த இதழில் சாதகப் பித்தத்தின் இருப்பிடத்தையும், செயல்பாடுகளையும் பற்றி அறிந்துகொள்வோம்.
சாதகப் பித்தம்
சாதகப் பித்தத்தை சாதனைப்பித்தம் என்றே கூறலாம்.  இது இதயத்திலிருந்து மூளை, வரை தொடர்புடையது.
மனம், புத்தி, ஆசை, பற்று, எண்ணம், செயல் இவற்றைச் சீர்படுத்தும் பித்தமாகும்.
பலப்பல சாதனைகளைச் செய்து வாழ்வின் வெற்றியாளனாக மாற்றுவது
நிதானம் என்பது அமைதியான நிலை.  அதுதான் மனிதனுடைய ஆற்றலையும் அறிவையும் தூண்டும் நிலை.  இதைத்தான் உலகிற்கு வாழ்ந்து காட்டிய பெரியோர்கள் முதல் ஞானிகள் வரை தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்றார்கள்.  இம்மூன்றும் மனிதனை மேல் நிலைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கும். இந்த நிலையைத்தான் நிதானம் என்கின்றனர். இதுவே ஆன்ம நிலைக்கு எடுத்துச் செல்லும் நிலை.
நிதானம் சீராக அமையுமானால் 18 அடங்கலும்
மனிதனின்  உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது.  காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர்.  அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.
சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள்.  அது வெள்ளை நிறப்

நிலநடுக்கம் - வீடு ஆடினாலும் ஆபத்து இல்லை!--உபயோகமான தகவல்கள்

நிலநடுக்கம் - வீடு ஆடினாலும் ஆபத்து இல்லை!

நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்பட்டது, சுமத்ராவில் ஏற்பட்டது என்றுதான் இத்தனை நாளும் செய்திதாள்களில் படித்து வந்தோம். இனி அப்படி இருக்க முடியாது. காரணம், தமிழகத்தின் சென்னை, கோவை பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாகவும், மிதமான அபாயம் என்கிற 3-வது நிலை பட்டியலில் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
ந்த வகையில், தற்போது ஐந்து மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டி ருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகுதான், தற்போது பிளான் அப்ரூவலே தருகிறார்கள். ஐந்து மாடிகளுக்கு மேல்தான் என்றில்லை; பொதுவாகவே நாம் கட்டும் வீடுகள்
நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கக் கூடியவைகளாக அமைப்பதே நல்லது. நில அதிர்வுகளைத் தாங்கும் வீடுகளை எப்படி அமைப்பது..? என சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் பிரிவின் டீன் எம்.சேகரிடம் கேட்டோம். அவர் கொடுத்த முக்கியமான சில டிப்ஸ்கள் இனி..!
முதலில் நாம் கவனமாக இருக்க வேண்டியது, எந்த சூழ்நிலையிலும் செங்கல், கம்பி, சிமென்ட் போன்றவற்றின் தரத்தில் விட்டுக் கொடுக்க கூடாது.
செங்கல் கட்டடம் எனில் நான்கு அடி உயரத்துக்கு ஒரு சுற்று என்ற வகையில், ஒரு மாடி கட்டடத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு சுற்றாவது கான்க்ரீட் பெல்ட் அமைக்க வேண்டும்.

கார் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்படும் கீழ்த்தளத்தை லேசான தூண்களோடு இப்போது நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு. சுவர் அமைக் காதபட்சத்தில் தூண்களின் பருமனையாவது அதிகப் படுத்துவது அவசியம். அல்லது பருமன் அதிகமுள்ள கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டப்படும் கட்டடம், சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். ஸ்டைலுக்காக கிராஸ் டிசைன் செய்யக் கூடாது.
கான்க்ரீட் கட்டடங்களில் தூண்களும் உத்திரமும் சேருமிடத்தில், அவற்றில் பிணையப்படும் 'ரிங்’ எனப்படும் கம்பி வளையங்கள் வழக்கத்தைவிட நெருக்கமாக இருக்க வேண்டும். உதாரணமாக 5 அங்குலத்துக்கு ஒரு 'ரிங்’ பொருத்தப்படுகிறது எனில், குறிப்பிட்ட ஜாயின்ட்களில் 4 அங்குலத்துக்கு ஒரு 'ரிங்’ பொருத்தப்பட வேண்டும்.
20, 25 அடுக்குகள் என மிக உயரமான கட்டடங்களில் தூண்களுக்கும் உத்திரங்களுக் கும் இடைப்பட்ட பகுதியை செங்கல்லை கொண்டு மட்டும்  சுவர் அமைக்காமல், இடையிடையே கான்க்ரீட் சுவர் அமைக்க வேண்டும். அது மட்டுமல்ல, கட்டடத்தின் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதி வரைக்கும் ஷியர்வால் (sலீமீணீக்ஷீஷ்ணீறீறீ) எனப்படும் கான்க்ரீட் சுவரை அமைக்க வேண்டும். லிஃப்ட் அமைக்கப்படும் இடத்தில் லிஃப்ட்டைச் சுற்றிலும் ஷியர்வால் அமைக்கலாம். நிலநடுக்க அதிர்வின் விசை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் இருக்கும் என்பதால், அந்த விசையை இத்தகைய ஷியர்வால் சமன்படுத்தி கட்டடம் விரிசல் விழாமல் தடுக்கும்.
நிலநடுக்க அபாயப் பகுதிகளில் கருங்கல்லை வைத்து கட்டடங்கள் கட்டக் கூடாது. இது செங்கல்லைவிட பல மடங்கு ஆபத்தானது.
ஐந்து மாடி, பத்து மாடி என மிக உயரமான கட்டடங்களில் 'டேம்பர்’ (பீணீனீஜீமீக்ஷீ) அமைப்பது பாதுகாப்பை அதிகப்படுத்தும். 'டேம்பர்’ என்பது ஷாக் அப்ஸர்வர் ஸ்பிரிங் போன்று நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டது. இதனை உத்திரங்களின் எதிரெதிர் முனைகளுக்கு இடையே பொருத்துகிறபோது நிலநடுக்க அதிர்வின் விசைகளை பிரித்துக் கொடுத்து

30 வகை காம்பினேஷன் ரெசிபி - 30 நாள் 30 வகை சமையல்




'ஜோடி பொருத் தம் சரியாக அமைய வேண்டும்’ என்பது மண வறைக்கு மட்டுமல்ல... சமையலறைக்கும் அட்சரசுத்தமாக பொருந் தும். இட்லி - சாம்பார், பூரி - மசாலா என்றெல்லாம் ருசியோடு உணரப்பட்ட காம்பினேஷன்களை அடித்துக் கொள்ளவே முடியாது.  இதே போல பல வகையான 'ஜோடி அயிட்ட'ங்களை, '30 வகை காம்பினேஷன் ரெசிபி’ என்ற பெயரில் வழங்கி இருக்கிறார் சமையல் கலை நிபுணர் ..
''குழல் புட்டு - பயறு கறி, குருணை அரிசி உப்புமா - கொத்சு போன்ற சுவை யான அயிட்டங்களுடன், இடியாப்பம் - தேங்காய்ப்பால் மாதிரியான வயிற்றுக்கு இதம் அளிக்கும் காம்பினேஷன்களையும் தந்திருக்கிறேன். இவற்றையெல்லாம் செய்து பரிமாறினால், உறவு வட்டத்தில் நீங்கள்தான் பெர்மனன்ட் கிச்சன் குயின்'' என்று உற்சாகப்படுத்தும் பத்மாவின் ரெசிபிகளை,

தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்


நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும்

பெடிக்யூர்


என் தாயாருக்கு சர்க்கரை நோய் இருந்ததால், அவருக்கான பாத பரா மரிப்பை மருத்துவர், அழகுக்கலை நிபுணர் என இருவரிடமும் கலந்தாலோசித்து மேற்கொண்ட தால், அதில் எனக்குப் பரிச்சயம் அதிகம். அந்த அடிப்படையில் அதை உங்களுக்குப் பகிர்கிறேன்.
நம் உடலின் மொத்த எடையையும் தாங்கும் பாதங்களுக்கு... பல முக்கிய நரம்புகள் ஓடும் பாதங் களுக்கு... நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டும் உரிய பராமரிப்புகள்! அழகு

குழந்தைகள் ''உயரமாக வளர உளுந்து தைலம் உதவும்


குழந்தைகள் ஆரோக்கியமாக வளர சித்தவைத்தியம் எனும் நம்முடைய பாரம்பரிய வைத்தியம் என்ன சொல்கிறது? அதைப் பற்றி சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சித்த மருத்துவர் வேலாயுதம் இங்கே பேசுகிறார்.

''
ரத்த ஓட்டம் உடலில் பாய்கிற மாதிரியான செயல்களைச் செய்யாதபோது உயரம் தடைப்படலாம். கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருவதால் எலும்பின் வளர்ச்சி தடைப்படும். இப்போதைய குழந்தை களுக்கு அசைவு என்பது கொஞ்சம்கூட இல்லை. பலரும், 'கறுத்துவிடுவான்' என்று வெயில்படாமல் வளர்க்கிறார்கள். இதெல்லாமே எலும்பு வளர்ச்சியைத் தடைபோடும் விஷயங்கள்தான்.
உளுந்து தைலத்தை வாங்கி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்), காலையில அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். எகிறி குதித்துத் துள்ளி விளையாட பழக்க வேண்டும். இவையெல்லாம் உயரமாக வளர்வதற்கான வழிகள்!" என்று சொன்ன வேலாயுதம், முக்கியமான சில டிப்ஸ்களை பட்டியலிட்டார்...
பிறந்தது முதல் ஆறு மாதங்கள், தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கவேண்டும். மருத்துவ குணம் வாய்ந்த தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஒல்லியாக இருந்தாலும், எதிர்ப்புச் சக்தியும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
நன்றாக தண்ணீர்விட்டு தலைக்கு குளிப்பாட்டுவது, உடல் வளர்ச்சிக்கு அஸ்திவாரம். குழந்தை ஒரு களிமண் போல்தான். குளிப்பாட்டும்போது, கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.
ஆறாவது மாதம் முதல்... வெந்த புழுங்கல் அரிசிச் சோறு, மசித்த பாசிப்பருப்பு இவற்றுடன் பசுநெய் சேர்த்து கொடுப்பது, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்துக்கள் நேரடியாக உடம்பில் சேரும்.

8-
ம் மாதத்திலிருந்து முட்டையின் மஞ்சள் கரு, ஒரு வயதிலிருந்து முட்டையின் வெள்ளைக்கரு, காய்கறி, தினம் ஒரு கீரையை மசித்துச் சாதத்துடன் கலந்து கொடுத்து வந்தால்... வைட்டமின், தாது உப்புக்கள்

குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?


தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...