Sep 2, 2012

போப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்ட இத்தாலி கர்தினால் திடீர் மரணம்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கர்தினால் கார்லோ மரியா மார்ட்டின் இத்தாலியில் உள்ள மிலனில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இவர் ஐரோப்பாவின் மிகப்பெரிய கத்தோலிக்க சபையின் தலைவராகவும் மிலன் நகரின் ஆர்ச்பிஷப் ஆகவும் பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

அடுத்த போப் ஆண்டவரின் பதவிக்கு இவரது பெயர் முன் மொழியப்பட்டிருந்தது. கத்தோலிக்க சபைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக கார்லோ மரியா மார்ட்டின் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீனாவில் இருந்து தப்பியது: 3 வாரங்கள் கடலில் மிதந்து சென்ற பூனை- கலிபோர்னியாவில் மீட்பு

நன்றாக நீந்த தெரிந்த நீச்சல் வீரர்கள் கூட தொடர்ந்து ஓய்வில்லாமல் 24 மணி நேரத்திற்கு மேல் நீந்தினால், கை, கால்கள் சோர்வடைந்து  கரையேறி விடுவார்கள். அப்படி, கரை ஏதும் தென் படாவிட்டால் தண்ணீரில் மூழ்கி, மூச்சு திணறி இறந்து போவார்கள். ஆனால் கண்டெய்னர் ஒன்றில் சிக்கிக் கொண்ட 5 மாத பூனை குட்டி, பெருங்கடல் வழியாக 3 வாரம் மிதந்தபடியே சீனாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள  கலிபோர்னியா மாகாணத்திற்கு உயிருடன் வந்து சேர்ந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 3 வார கடல் பயணத்தின் போது, உணவு எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் கடல் பயணம் செய்த இந்த பூனைக்குட்டியை லாஸ் ஏஞ்சல்ஸ் கால் நடை மருத்துவமனை பராமரித்து  வருகின்றது. `ஹலோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூனை குட்டி, மருத்துவமனைக்கு வரும் போது கண்கள் இருண்ட நிலையில் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.

உடனே, அதை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மரணத்தில் இருந்து காப்பாற்றி விட்டோம். விரைவில் `ஹலோ' டிஸ்சார்ஜ் ஆகிவிடும் என்று கால் நடை மருத்துவர்கள் கூறினர். 

இருதயம் பலம் பெற.




இருதய பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.

2.
இதயம் பட படப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.

3.
இதய நோய்கள் தீரு:-துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்

இருதய ஓட்டையை சரி செய்ய முடியுமா?

இருதய ஓட்டையை சரி செய்ய முடியுமா?
இருதயத்தில் ஒட்டை என்பது, பிறவியில் இருந்து ஏற்படும் வியாதி. இது சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இருக்கலாம். இது தவிர எந்த இடத்தில் ஓட்டை, மேலிரண்டு அல்லது கீழிரண்டு பாகங்களுக்கிடையே இருந்தால் ஆபரேசன் மூலமோ அல்லது ஞிணிக்ஷிமிசிணி சிலிளிஷிஹிஸிணி  முறையிலோ எளிதில் சரி செய்யலாம். ஆனால் வேறு முக்கிய இடங்களில் இருந்தாலோ அல்லது ஓட்டையுடன் வேறு கோளாறுகள் இருந்தாலோ, கடினமான ஆபரேசன் தேவைப்படும். இந்த ஓட்டையால், நுரையீரலில் ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தால் நோயாளி ஆபரேசன் செய்யும், கட்டத்தை தாண்டிவிட்டார் என்று அர்த்தம். எனவே, நோயாளிக்கு எந்த இடத்தில், எந்தளவு ஓட்டை உள்ளது என்பதை பொறுத்தே, சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

ஆரோக்கியமான இருதயம்! ஆரோக்கியமான வீடு!


கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்றால் என்ன?
நமது உடலில், சவ்வு போல் உள்ள ஒரு படலம் கொழுப்புச் சத்து ஆகும்.
அதிக கொழுப்புச் சத்து இருதயத்துக்குக் கேடு. ஏன்?
நம் உடலுக்குத் தேவையான சராசரி 1500 மில்லிகிராம் கொழுப்பை, நம் உடம்பே உற்பத்தி செய்துகொள்கிறது. சுமார், 200 - 500 மில்லிகிராம் கொழுப்பு, நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைப்பதால், உடலில் கொழுப்புச் சத்தின் அளவு கூடுகிறது. நாளடைவில் இந்தக் கூடுதல் கொழுப்பு, நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் படிந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகிறது.
உங்களுடைய உடலில் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்று சோதித்தது உண்டா?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

ஈ.சி.ஜி.பரிசோதனை தேவையா?

நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை' என்றாள் அவள்.
அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன்.
'ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்' என்றாள் கோபமாக. `ஏன்?' என்று கேட்டேன்.

இருதய நோயாளியின் வாழ்நாள் நீடிக்க வழி வகுக்கும் நவீன மருத்துவம்

இன்று சர்வதேச நோயாளர் தினமாக உலக சுகாதார ஸ்தாபனம் (World Health Organization) பிரகடனப்படு த்தியுள்ளது.
ஏலவே இன்றைய காலகட்டத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் நடைபெற்று வருகின்ற இருதய நோய் தொடர்பான கிளினிக்கிற்கு (Clinic) செல்கின்ற நோயாளர் பற்றியும், இருதயத்தின் (Heart) இயல்பான இயக்கம், அது பழுதடைவதற்கான காரணம், இதனால் உடலுக்கு என்ன நேரிடுகின்றது, இதற்குரிய மருத்துவம் யாது? இருதயக் கோளாறுகளை அறிய உதவும் சோதனைகள், இருதய அறுவை சிகிச்சையின் (Operation) போது உபயோகிக்கப்படுகின்ற திசுக்கள் என்பவை பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி. இவ்வுலகில் ஒருவர் எவ்வளவு செல்வச் செழிப்புடன் குபேரனாக வாழ்ந்தாலும் நோயினால் பீடிக்கப்பட்டு அல்லலுறுவாராயின் களிப்புடன் வாழ இயலாது என்பது நிதர்சனமாகும்.

ரத்த அழுத்தம் வராமல் தடுக்க


இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது. 
இந்த இரத்த அழுத்த நோய்  எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.  இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது.  இந்த இரத்த

இருதய நோயின் அறிகுறிகள்


உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது இரத்த ஓட்டம். இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இரத்தத்தை சுத்திகரிப்பதில் இருதயம் முக்கியப் பங்காற்றுகிறது.
சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருதயத்தின் இரத்த ஓட்டமானது, அதன் தமனி மற்றும் இரத்தநாளங்களின் தன்மையைப் பொருத்து சீராக அமையும்.
வயதானவர்களுக்கு இருதயம் தடிப்பாகவும் கால்ஷியம் படிவம் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுவது இயல்பு.
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும் இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது.
இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.

பெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்.


 

சமீப ஆண்டுகளாக இருதய நோய் தாக்குதலால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. இது ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படின் ஆண்களைவிட (46%) பெண்களுக்குத் தான் அதிகமாக (52%) ஏற்படுகின்றது என்று அமெரிக்க இருதய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சாதாரணமாக ஆண்களுக்கு இருதய நோய் தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது என்றும், பெண்களுக்கு வயது முதிர்ந்த பருவத்தில் தான் ஏற்படுகின்றது என்ற கருத்து நிலவினாலும், அமெரிக்கரின் தற்போதுள்ள கணக்குப்படி, பெண்களுக்கும் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்ற காரணத்தால் இந்நோய் தாக்கத்தைத்தடுத்து பெண்களின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த முனைந்துள்ளனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...