இத்தாலி
நாட்டைச் சேர்ந்த கர்தினால் கார்லோ மரியா மார்ட்டின் இத்தாலியில் உள்ள
மிலனில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இவர் ஐரோப்பாவின் மிகப்பெரிய
கத்தோலிக்க சபையின் தலைவராகவும் மிலன் நகரின் ஆர்ச்பிஷப் ஆகவும் பல
ஆண்டுகள் பதவி வகித்தார்.
அடுத்த போப் ஆண்டவரின் பதவிக்கு இவரது பெயர் முன் மொழியப்பட்டிருந்தது. கத்தோலிக்க சபைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக கார்லோ மரியா மார்ட்டின் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்த போப் ஆண்டவரின் பதவிக்கு இவரது பெயர் முன் மொழியப்பட்டிருந்தது. கத்தோலிக்க சபைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக கார்லோ மரியா மார்ட்டின் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தேவாலங்கள் சோர்ந்து விட்டன நமது பிரார்த்தனை கூடங்கள் காலியாக கிடக்கின்றன. நாம் இன்னும் பழமைவாதத்தில் இருந்து வெளியில் வரவே இல்லை. நமது சடங்கு, சம்பிரதாயங்களிலும், நடை, உடை, தோரணையிலும் மட்டும்தான் பகட்டு தென்படுகின்றது என்று கத்தோலிக்க மதத்தின் கொள்கைகளை கடுமையாக சாடியவர் கார்லோ மரியா மார்ட்டின்.
கத்தோலிக்க மக்களின் விவாகரத்து, மறுமணம் குறித்து முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட மார்ட்டினி, காலமாற்றத்துக்கு ஏற்றவாறு கத்தோலிக்க சபையினரும் தங்களை புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவரது கடைசி பேட்டி சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது. மரணம் அடைந்த கார்லோ மரியா மார்ட்டின் உடலுக்கு ஆயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment