சமீப
ஆண்டுகளாக இருதய நோய் தாக்குதலால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்து
வருகின்றது. இது ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படின் ஆண்களைவிட (46%) பெண்களுக்குத் தான் அதிகமாக (52%) ஏற்படுகின்றது என்று அமெரிக்க இருதய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சாதாரணமாக ஆண்களுக்கு இருதய நோய் தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது என்றும், பெண்களுக்கு வயது முதிர்ந்த பருவத்தில் தான் ஏற்படுகின்றது என்ற கருத்து நிலவினாலும், அமெரிக்கரின் தற்போதுள்ள கணக்குப்படி, பெண்களுக்கும்
இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்ற காரணத்தால் இந்நோய்
தாக்கத்தைத்தடுத்து பெண்களின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த
முனைந்துள்ளனர்.
இருதய தாக்குதல் எவ்வாறு ஏற்படுகின்றது?
இரத்த
நாளங்களில் ஏற்படும் இரத்த ஓட்டத்தடையினால் இருதயத் தாக்குதல்
ஏற்படுகின்றது. இரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ரால் அளவு மிகுந்த நிலையில்
அவை தமனி உட்சுவர்களில் ஊடுருவிச் சென்று, சுவர்களில் கடினத்தன்மையை உண்டாக்கி இரத்த ஓட்டத்தடையை ஏற்படுத்துகின்றது. பெரும்பாலும் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் அடர்வு குறை கொழுப்புபுரத கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் கொரனெரி இருதய நோய் ஏற்படுகின்றது.
இதில்
அடர்வு குறைவு கொழுப்பு புரதங்கள் மிகுந்த நிலையில்தான் பாதிப்பு அதிகம்
ஏற்படுகின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பை கணிக்கும் மானியாக கருதப்படும்
பொருள் அடர்வு குறை கொழுப்பு புரதங்கள்தான். இவை உயிரை அழிக்கும் இருதய
நோய் ஏற்படுத்துவதில் முதன்மையாக உள்ளன. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும்
கொழுப்பு பொருட்கள் தனித்த நிலையில் காணப்படுவதில்லை. அவை எப்போதும்
புரதத்துடன் இணைந்தே காணப்படுவதால் இவை கொழுப்பு புரதம் என்று
அழைக்கப்படுகின்றன.
இதில் அடர்வு குறை கொழுப்பு புரதங்கள் கொலஸ்ட்ரால் அளவை மிகுத்து தீங்கு
விளைவிக்கின்றன. அடர்வு மிகு கொழுப்பு புரதங்கள் கொலஸ்ட்ரால்
அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.
இதற்குக்காரணம், அடர்வு குறை கொழுப்புப் புரதத்தில் 50% கொலஸ்ட்ராலும், கால் பங்கிற்கும் குறைவாக புரதத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அடர்வு மிகு கொழுப்புப் புரதத்தில் 50%த்திற்கு அதிகமான புரதச் சேர்க்கையும், கால் பங்கிற்கும் குறைவான கொலஸ்ட்ராலும் கொண்டுள்ளது. எனவே அடர்வு மிகு கொழுப்புப் புரதம் அதிகம் உள்ள நிலையில் இருதய தாக்குதல் மற்றும் கொழுப்புப் படிவிறுக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பெண்களில் இருதய நோய்த் தாக்குதல் மிகக் குறைவாக இருப்பதற்குக் காரணங்கள் :
சாதாரணமாக
ஆண்களுக்கு அடர்வு குறை கொழுப்பு புரத அளவு அதிகரிப்பதால் இருதய நோய்
ஏற்படுகிறது. ஆனால் பெண்களில் அடர்வு குறை கொழுப்பு புரத அளவிற்குப் பதிலாக
அடர்வு மிகக் குறைந்த கொழுப்புப் புரத அளவில்தான் மாற்றம் ஏற்படுவதால், இருதய நோய் பாதிப்பு பெண்களுக்கு அதிகமாக இல்லை. மேலும் மரபு வழியாக, மரபுக்கூறு குறைவினால் ஏற்படுத்தப்படும் இருதய நோயின் தாக்கம் 2% தான். எனவே இதனால் ஏற்படும் பாதிப்பும் குறைவு.
பொதுவாக
கொழுப்புச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் அதிகம் உண்பதால் இருதய நோய்
ஏற்படுகிறது. ஆனால் பெண்களில் நாள மில்லா சுரப்பிகள் சுரக்கும்
ஹார்மோன்களினால் ஆக்க சிதைவு மாற்றம் ஏற்பட்டு, இரத்தத்தில்
கொழுப்பு புரதங்களினால் ஏற்படும் நோய் அதிகரிப்பு நிலையை
கட்டுப்படுத்தப்படுகின்றது. இதனை ஆய்வு மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
எடுத்துக்காட்டாக, கருப்பையை நீக்கிய குரங்குகளில் கொழுப்புமிகு உணவு கொடுப்பதால் ஏற்படும் கொலஸ்ட்ரால் தேக்கம், கருப்பைக் கொண்ட குரங்குகளில் ஏற்படுவதில்லை என்று கூறியுள்ளனர்.
உடற் பருமனினால் ஏற்படும் இருதய தாக்குதல் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படுகிறது. அதாவது அடர்வு குறை கொழுப்பு புரத கொலஸ்ட்ரால் அளவு மிகுந்தும், அடர்வுமிகு கொழுப்புப் புரத கொலஸ்ட்ரால் சிதைந்தும் காணப்படுகிறது. அதனால் உண்டாகும்
பாதிப்பு அதிகரிக்கின்றது. தேகப் பயிற்சி செய்து இதனை நிவர்த்தி செய்ய
இயலும். தேகம் பயிற்சியின்போது அடர்வுமிகு கொழுப்பு புரத அளவு அதிகரித்து
நன்மையளிக்கிறது.
ஆல்கஹால் மற்றும் சிகரெட் குடிக்கும் பெண்களிலும் இந்நோயின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பினும், மேற்படி பழக்கங்களை தவிர்த்தால், இருதய நோய் ஏற்பட வழியில்லை. இப்படியாக கொழுப்பு வகை உணவுப் பொருட்கள் மரபு வழிக் கூறுகள் ஆல்கஹால் மற்றும் சிகரெட் குடிக்கும் பழக்கங்களால், இரத்த கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் நிலை ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரேவிதமாக ஏற்படுகிறது என்றாலும், பெண்களுக்கு இதைத் தவிர வேறு சில காரணிகளும் இந்நோயின் தாக்கத்தை ஏற்படுத்துவனவாக உள்ளன.
அவைகளில்
மிகவும் முக்கிய காரணி ஹார்மோன்களால் ஆன கருத்தடை மாத்திரை கள்
பயன்படுத்துவது தான். அவை கொழுப்பு மற்றும் கொழுப்பு புரத அளவை
அதிகப்படுத்துகின்றன. கருத்தடை மாத்திரைகளில் எஸ்ட்ரோஜன் மற்றும்
புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் இருப்பதால் கருச்சிதைவு ஏற்படாமல்
தடுக்கின்றன.
பொதுவாக, எஸ்ட்ரோஜன்
என்ற ஹார்மோன் தான் பெண்களில் கொழுப்பு உயர்வு ஏற்படாமல் தடுக்கின்றது.
அதாவது அடர்வு மிகு கொழுப்பு புரத கொலஸ்ட்ரால் அளவை மிகுத்தும் அடர்வு குறை
கொழுப்பு புரத கொலஸ்ட்ரால் அளவை குறைத்தும் செயல்புரிகின்றது. ஆனால்
கருத்தடை மாத்திரைகளில் எஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் இதற்கு மாறான
எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த மாத்திரையில் உள்ள 19
நார் புரோ ஜெஸ்டிரின் இரத்தத்தில் அடர்வு மிகு கொழுப்பு புரத அளவைக்
குறைத்து அடர்வு குறைவு கொழுப்பு புரத அளவை அதிகரித்து தீங்கு
விளைவிக்கிறது.
தற்போது கிடைக்கும் கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பது, கொழுப்பு
புரத அளவை முக்கியமாக அடர்வு குறை கொழுப்பு புரத அளவை மிகச் செய்கின்றன.
அடர்வு குறை கொழுப்பு புரத மிகுதி தான் இருதய நோய் தாக்குதல் ஏற்பட காரணமாக
உள்ளது. முக்கியமாக, குறைந்த அளவு எஸ்ட்ரோஜன், மிகுந்த அளவு புரோஜெஸ்டின் இவைகளின் கூட்டுத்தான் இருதய நோய் பாதிப்பை அதிகம் ஏற்படுத்துகின்றன. அதாவது எஸ்ட்ரோஜன், புரோ எஸ்ட்ரோஜன் விகிதத்தில் மாற்றம் ஏற்படுவதுதான் இதற்கு காரணம்.
மாதவிடாய்
தடுப்பு முறைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் மேற்கூறிய பாதிப்பை
ஏற்படுத்துகின்றன. அதாவது இயற்கையான எஸ்ட்ரோஜன் ஏற்படுத்தும் பயனுள்ள
விளைவுகளைப் போல் அல்லது செயற்கை விளைவுகளை உண்டாக்குகின்றன.
கருத்தடை
மாத்திரைகள் சாப்பிடுவதால் அடர்வு குறை கொழுப்பு புரத கொலஸ்ட்ரால் அளவுகளை
மிகுத்து இருதயத் தாக்குதலை ஏற்படுத்துவதுடன் நுரையீரல் இரத்த
நாளங்களிலும் இரத்த உறைவு ஏற்படுத்தி பாதிப்பு உண்டாக்குகின்றன.
நல்ல
ஆரோக்கியமான தேக நிலை உடையவர்கள் கருத்தடை மாத்திரை சாப்பிடும்போது
இருதயநோய் பாதிப்பு ஏற்பட வழியில்லை. ஆனால் உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள்
கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது அதிக ஆபத்தை விளைவிக்கும். அதனால் தான்
மருத்துவர்கள் ஆலோசனை கூறுவதற்கு முன் இரத்த அழுத்தத்தைச் சோதிக்கின்றனர்.
இவ்வாறாக ஹார்மோன்களால் ஆன கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால் இருதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெண்கள், தேக
நிலையை சோதித்து அதற்கு ஏற்றார்போல் தடுப்பு முறை வழிகளை கடை பிடித்து
வந்தால் கொழுப்புயர்வால் ஏற்படும் விபரீத விளைவுகளிலிருந்து தங்களை காத்து
நல்வாழ்வு வாழலாம்.
No comments:
Post a Comment