நன்றாக
நீந்த தெரிந்த நீச்சல் வீரர்கள் கூட தொடர்ந்து ஓய்வில்லாமல் 24 மணி
நேரத்திற்கு மேல் நீந்தினால், கை, கால்கள் சோர்வடைந்து கரையேறி
விடுவார்கள். அப்படி, கரை ஏதும் தென் படாவிட்டால் தண்ணீரில் மூழ்கி, மூச்சு
திணறி இறந்து போவார்கள். ஆனால் கண்டெய்னர் ஒன்றில் சிக்கிக் கொண்ட 5 மாத
பூனை குட்டி, பெருங்கடல் வழியாக 3 வாரம் மிதந்தபடியே சீனாவில் இருந்து
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திற்கு உயிருடன் வந்து சேர்ந்து
வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 3 வார கடல் பயணத்தின் போது, உணவு எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் கடல் பயணம் செய்த இந்த பூனைக்குட்டியை லாஸ் ஏஞ்சல்ஸ் கால் நடை மருத்துவமனை பராமரித்து வருகின்றது. `ஹலோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூனை குட்டி, மருத்துவமனைக்கு வரும் போது கண்கள் இருண்ட நிலையில் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.
உடனே, அதை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மரணத்தில் இருந்து காப்பாற்றி விட்டோம். விரைவில் `ஹலோ' டிஸ்சார்ஜ் ஆகிவிடும் என்று கால் நடை மருத்துவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment