Oct 25, 2012

அளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்


  24 Oct 2012

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, நம் மக்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாத, அளவற்ற இன்டர்நெட் இணைப்பு தரும் கட்டண திட்டங்களையே விரும்புகிறார்கள் என்று அறிவித்துள்ளது. 

ஏர்னஸ்ட் அண்ட் யங் என்னும் இந்த அமைப்பு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உட்பட 12 நாடுகளில் இத்தகைய ஆய்வுக் கணக்கெடுப்பினை மேற்கொண்டது. 

மாறாத ஒரே மாதக் கட்டணத்தில் அளவற்ற டேட்டா தரவிறக்கம் செய்திடும் திட்டங்களையே தங்கள் மொபைல் போன்களில் மேற்கொள்ள 54% மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

கணக்கெடுப்பில் கலந்து கொண்டோரில், மூன்றில் ஒருவர் டவுண்லோட் செய்யப்படும் டேட்டா அடிப்படையிலான திட்டங்களைப் புரிந்து கொள்ள

Oct 24, 2012

வயது முதிர்விலும் இளமை தரும் நெல்லிக்கனி

வயது முதிர்விலும் இளமை தரும் நெல்லிக்கனி
[Wednesday, 2012-10-24
News Service முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

Oct 23, 2012

மிட் ரோம்னியை மிஞ்சினார் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமாவுக்கு 48 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதிப்பது கடந்த 1960ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
இதன் படி முதல் சுற்று விவாதம் டென்வர் நகரிலும், இரண்டாவது சுற்று விவாதம் நியூயார்க்கிலும், மூன்றாவது சுற்றி விவாதம் புளோரிடாவிலும் நடந்தது.
இந்த விவாதங்களில் ஒரே மேடையில் அமர்ந்து கொண்டு ஒபாமாவும்,

Oct 21, 2012

கின்னஸ் சாதனை படைக்க பாகிஸ்தானில், தேசிய கீதம் பாடிய 43 ஆயிரம் பேர்

கின்னஸ் சாதனை படைக்க பாகிஸ்தானில், தேசிய கீதம் பாடிய 43 ஆயிரம் பேர்லாகூர், அக். 21-

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் ஒரே நேரத்தில் 15 ஆயிரத்து 243 பேர் தேசியகீதம் பாடினர். அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. அந்த சாதனையை முறியடிக்க பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 42 ஆயிரத்து 813 பேர் பாடினர்.

அங்குள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் லாகூரில் தேசிய ஆக்கி ஸ்டேடியத்தில் பஞ்சாப் இளைஞர் விழா நடந்தது. அங்கு திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடினர்.

இந்த நிகழ்ச்சி பஞ்சாப் முதல்-மந்திரி முகமது ஷபாஷ் ஷரீப் முன்னிலையில்

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கவலைக்கிடம்?

ஹவானா: கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மரண படுக்கையில் இருப்பதாக மீடியாக்களில் வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ புரட்சி மூலம் கியூபாவை பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ (86). பல ஆண்டுகள் கியூபாவின் அதிபராக பதவி வகித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் அதிபர் பதவியை கொடுத்து   விட்டு பதவி விலகினார். இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ மரண படுக்கையில் இருப்பதாகவும், அசைவற்று இருப்பதாகவும், செயற்கை சுவாசத்தில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் மீடியாக்களில் வெளியாகின.  Ôபிடல் காஸ்ட்ரோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம்தான் அவர் உயிருடன் இருப்பார்Õ என்றெல்லாம் ஆன்லைனில் தகவல்கள் வேகமாக பரவின. வெனிசுலா

அதிஷடலாப சீட்டிழுப்பு - SMS ஐ நம்பி 98,000 ரூபாவை இழந்த நெல்லியடி இளைஞன்:


News Service
அதிஷடலாப சீட்டிழுப்பு - SMS ஐ நம்பி 98,000 ரூபாவை இழந்த நெல்லியடி இளைஞன்:
[Sunday, 2012-10-21
5 இலட்சம் ரூபா அதிஷடலாப சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாக கைத்தொலைபேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி அவ்வறிவுறுத்தலின் படி வங்கியில் 98,000 வைப்பிலிட்ட இளைஞன் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(19.10.2012) நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
  

குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசிக்கு 5 இலட்சம் பணப்பரிசு சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 98,000 ரூபாவை முத்திரை வரியாக செலுத்த வேண்டும் எனவும், இந்தப் பணத்தை குறிப்பிட்ட

ஒலுவில் பிரதேசத்தில் ஒரே தடவையில் பிபட்ட 7,000 பாரை மீன்கள்: - ஒரு கோடி ரூபாய் என மதிப்பீடு
[Sunday, 2012-10-21
News Service ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலாளி ஒருவருக்கு சொந்தமான தோணிகளுக்கு ஒரே தடவையில் சுமார் 7,000 பாரை மீன்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிக்கின. ஓவ்வொன்றும் 6 முதல் 7 கிலோ கிராம் எடையுடைய இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  
இந்த பிரதேச வரலாற்றில் இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டமை

வயிற்றிலுள்ள கழிவுகளை அகற்றி பிறவிப் பயனை நீடிக்கும் கடுக்காய்



[Sunday, 2012-10-21

 
News Service'பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள். பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து குழந்தை வயிற்றைக் கெடுத்துவிடுவாள்.
  

ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

'காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..' - சித்தர் பாடல்

மனிதன் பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

அவுஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: மக்கள் ஓட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012,
அவுஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுக் கூட்டங்களில் இன்று காலை 4.31 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 6.6 என பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே நிலநடுக்கம் சற்று சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர்.
மேலும் தங்களது வீடுகளை விட்டுவெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தெற்கு பசிபிக் கடலில் 22 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்நில நடுக்கத்தினால் கடலில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழுந்தன.
ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

படுக்கை புண் வராமல் தடுக்க விசேஷ மின்சார உள்ளாடை

டோரோண்டோ:நோயாளிகளுக்கு, படுக்கை புண் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மின் ஆற்றல் கொண்ட உள்ளாடை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து உள்ளனர்.
படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு, பின்புறத்தில் படுக்கை புண் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர்.ஒரே இடத்தில் அசையாமல் படுத்திருப்பதால், ரத்த ஓட்டம் தடைபட்டு அதனால் புண் ஏற்படும். இதற்கு தீர்வு காணும் விதமாக, கனடா நாட்டு மருத்துவர்கள் இதற்காக பிரத்யேகமான உள்ளாடை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இந்த உள்ளாடையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மின் திண்டுகளும் 12 மணி நேரத்திற்கு, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை, மின் அதிர்வை ஏற்படுத்தும். இந்த அதிர்வு 10 வினாடிகள் நீடித்திருக்கும். 37 பேரிடம் இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டதில், இந்த உள்ளாடைகள் உடல் அசைவது போன்ற நிலையை ஏற்படுத்தி படுக்கை புண்கள் வராமல் தடுத்தன.

மரணத்தை ஏற்படுத்தும் பக்கவாத நோயால் பிடெல் காஸ்ட்ரோ பாதிப்பு


[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012,
கியூபாவின் மாஜி ஜனாதிபதியும் புரட்சியாளருமான பிடெல் காஸ்ட்ரோ(வயது 86) பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தன்னை சுற்றியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுவதாகவும் பேச முடியாத நிலையில் காஸ்ட்ரோ உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகின்ற மருத்துவர் ஜோஸ் மார்க்குயினா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, காஸ்ட்ரோவை தற்போது தாக்கியிருக்கும் பக்கவாத நோய் நரம்பு மண்டலத்தை முழுவதும் செயலிழக்க செய்து இறப்பை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...