Published:Sunday, 02 December 2012,
உலகம்
2012 டிசம்பர் 21ம் திகதியன்று அழியுமா? அழியாதா? என்ற மிகவும் பெறுமதி
வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். 'உலகம்
நிச்சயம் அழியும்' என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும், மாயன்கள்
என்றாலே மாயமும், மர்மமும் என்பதால், உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை
அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர்
22 இல் உலகம் அழியுமா? இல்லையா? என்பதற்கான விடையறிதல்தான். எனவே, அதற்கான
விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு
பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம் ஒன்று சேரத்
தொகுத்து, இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின்
சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம்.
அதற்கு முன்னர், கடந்த வாரம் (27.2.2012) வெளிவந்த ஒரு அசத்தலான செய்தியைச்
சொல்கிறேன். இது எந்த வகையான செய்தியென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
இது நடந்ததும் மாயன் பிரதேசத்தில்தான். உண்மையாகவே நான் சொல்லப் போகும்
இந்தச் சம்பவம் நடந்தது 24.07.2009 அன்றுதான். ஆனால் அது இப்போதுதான் மிகப்
பெரிதாக வெளிவந்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? என்பதற்கு என்னிடம்
எந்தப் பதிலும் இல்லை. ஆனால் நீங்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என்பதே
என் விருப்பம். 'என்ன நான் விசயத்தைச் சொல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்'
என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி விசயத்துக்கு வருகிறேன்.
விசயம் இதுதான்........! எல் சல்வடோரைச் சேர்ந்த ஹெக்டர் சிலிஎஸார் (Hector
Siliezar) என்பவர், தனது மனைவியுடனும், இரண்டு மகள்களுடனும், சிசேன் இட்ஷா
(Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டைப் பார்ப்பதற்கு உல்லாசப்
பிரயாணம் மேற் கொண்டிருந்தார். இந்தப் பிரமிட்டைப் பற்றி முன்னர் பல
தடவைகள் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரதேசத்தைக்
கண்டுகளித்த சிலிஎஸார், தனது இரண்டு மகள்களையும் அந்தப் பிரமிட்டைப்
பின்புலமாக வைத்துப் போட்டோக்கள் எடுத்தார். அந்த நேரத்தில் சிறிதாக மழை
மேகங்கள் மேலே சூழ்ந்து, மெல்லிய இருட்டாக மாறத் தொடங்கி இருந்தது. அவர்
மகள்களைப் போட்டோ எடுத்தது தனது 'ஐபோன்' மூலமாக. அவர் எடுத்த முதல் இரண்டு
போட்டோக்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால்
மூன்றாவதாக எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து
போனார். சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த அது,
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா