May 4, 2013

Welcome Welcome ஆபத்து மிகுந்த மூளை இரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளமையை கண்டுபிடிக்க சில வழிகள்!


News Serviceமூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவது ஒரு தொற்றுநோய் அல்ல. இது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால், வயது அதிகரிக்கும் போது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை. பரம்பரை மரபணு, கதிர்வீச்சு, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என சில காரணங்களால் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. மின் கம்பிகளுக்கு அருகே வசித்தல், அலைப்பேசிகளை அதிகமாக பயன்படுத்துவது, ஆஸ்பிரின் பயன்பாடு ஆகியவற்றுக்கும் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கும் தொடர்பு உண்டு என்று பரவலாக பேசப்பட்டாலும், அவை நிரூபிக்கப்படாத காரணங்களாகவே இருந்து வருகின்றன. மூளை ஓடு, மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அல்லது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படும் இடத்தில் இயக்கக்கோளாறு ஏற்படுவதால், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம். மேலும் வேறு சில அறிகுறிகள் கொண்டும், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறியலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகரித்த எடையால் அவதிப்படுகின்றீர்களா? இதோ உங்களுக்காகவே ஒரு இயற்கை மருந்து!


News Serviceஎடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.
   வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

பாலினால் உச்ச ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக பின்பற்றவேண்டிய சில வழிமுறைகள்!

News Serviceஉண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஏனெனில் அன்றாடம் காலையில் எழுந்ததும், முதலில் தண்ணீர் குடிக்கிறோமோ இல்லையோ பாலை, டீ அல்லது காபி போட்டு குடிக்காமல் இருக்கமாட்டோம். அந்த அளவில் பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. குறிப்பாக பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீன் மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்று. மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு ஒரு காரணம் கால்சியம் குறைபாடு என்றும் சொல்லலாம். ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் சேர்க்க வேண்டும். சிலருக்கு பால் வாசனை பிடிக்காது. பாலை கண்டாலே ஓடிவிடுவார்கள்.
   அத்தகையவர்கள் பாலை வேறு வழியிலாவது நிச்சயம் குடிக்க வேண்டும். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள். இப்போது இந்த பாலை எப்படியெல்லாம் வித்தியாசமான முறையிலும், ஆரோக்கியமானதாகவும் சாப்பிடுவது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளோம், அதைப்

அலைமுதிர்ச்சோலை:

அலைமுதிர்ச்சோலை:


COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

C - Common
O - Oriented
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and

R - Research

COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் வசித்து வரும் அவருக்கு, இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை திரையுலக பிரமுகர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பார்த்து வருகின்றனர்.

dead_body தீக்காயங்களுடன் வயோதிபரின் சடலம் மீட்பு

dead_bodyயாழ்.நல்லூர் அரசடிப் பகுதியில் தன்னைத் தானே தீ மூட்டி  எரிந்துள்ள வயோதிபர் ஒருவரை சடலமாக யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அரசடியைச் சேர்ந்த நவரட்ணம் கணேசமூர்த்தி (வயது 55) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நல்லூர் அரசடிப் பகுதியில் தன்னைத் தானே தீ மூட்டி  எரிந்துள்ள வயோதிபர் ஒருவரை சடலமாக யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அரசடியைச் சேர்ந்த நவரட்ணம் கணேசமூர்த்தி (வயது 55) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கினிநாள் இன்று முதல் ஆரம்பம்: வெப்பநிலை அதிகரிப்பு


sun heat

வருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று 4ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவடைகின்றது.
இந்த அக்கினி நாள் காலங்களில் கிரகப் பிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட நாள்கள் எனவும், நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் (தானிய வகை) நாற்று நடும் வேலைகளை செய்யக் கூடாது எனவும், நிழல் தரு விருட்சங்களை கத்தி கொண்டு வெட்டி அழிக்கக் கூடாது என எமது இந்து மத சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருப்பதுடன், இயலுமான அளவு மரங்களை போஷிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கின்றன.
மேலும், ஆசியப் பிராந்தியத்தின் வெப்ப வலைய பகுதிகளில் சூரியனின் வெப்பம் மிக கடுமையான அளவு இருக்கும். எமது அண்டை நாடான இந்தியாவில் இக் காலப் பகுதியில் நிலவும் கூடுதலான வெப்பத்தினால் பலர் மரணிப்பதும் சில பிரதேச பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதும் உண்டு.
இந்த அக்கினி நாள் காலப் பகுதியிலேயே கிழக்கில் கண்ணகி அம்மன் சடங்குகள் இடம் பெறுவது வழக்கம், அம்மன் சடங்குகள் (வைகாசி பூரணை) இம் மாதம் 24ஆம் திகதி அக்கினி நாளின் அகோர வெப்பம் குறைவடையும் என்பது எமது பிரதேச மக்களின் நம்பிக்கையாகவும் இருந்து வருகின்றன.

May 3, 2013

இவர்கள்தான் மனிதர்கள் : வீடியோ



ரஷ்யாவின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் டாஷ்போர்ட் கமெராக்கள் வாகன விபத்துக்களையும், எரிநட்சத்திரங்களையும் மாத்திரமா படம்பிடிக்கும்? இல்லை.. ரஷ்யாவில் உள்ள நல்ல மனிதர்களின் உள்ளங்களையும் படம்பிடிக்கும் என்கிறது இவ்வீடியோ.
அடுத்தமுறை நீங்கள் வாகங்களில் செல்லும் போது உங்கள் வாகனத்திற்கு முன்னாள் இப்படி ஒரு சம்பவம் நேர்ந்தால், நீங்கள் ஓட்டுனராக இருக்கும் பட்சத்தில் அல்லது முன் சீட்டில் அமர்ந்திருக்கும் பட்சத்தில் என்ன செய்வீர்கள் என இந்த வீடியோவை பார்த்ததும் கற்றுக்கொள்வீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே : 2012இன் மிகச் சிறந்த நகரங்கள் 3


வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் இரண்டையும் சமாளித்து வாழும் மனிதனுக்கு வாழும் இடம் சுற்றம் தரமானதாக அமைத்துக்கொள்வது அவசியமாகிறது.
அவ்வகையில் நியூயோர்க் ஆலோசணை நிறுவனமான மெர்சர் (Mercer) ஓர் புதிய அனைத்துலக ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதாவது தரமான வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய நகரங்கள் எவை என அவ் ஆய்வு வெளிப்படுத்தியிருந்தது.

சீனாவின் குளிர்கால விந்தையுலகம் : ஜொலிக்கும் பனி மாளிகைகள்


சீனாவின் வடகிழக்கு ரஷ்ய எல்லையின் அருகே உள்ள ஹார்பின் நகரில் நடைபெரும் பனி மற்றும் ஸ்னோ விழா பிரபலமானது.
தற்போது 29வது ஆண்டு சர்வதேச பனி மற்றும் ஸ்னோ விழா ஜன 5ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெற்று பனிக்கட்டிகள் மூலம் மாளிகைகள், பிரமிடுகள் என மிகப்பெரிய அளவினான சிற்பங்கள் பலவற்றை கண்களுக்கு நல் விருந்தாக இங்கே காணலாம். இச் சிற்பங்கள் சிறப்பு LED விளக்குகள் பயன்படுத்தப்பட்டு பலவகையான நிறங்களில் ஜொலிப்பதனால் இரவில் மேலும் மெருகூட்டுடன் காட்சி தருகின்றன.  

பல்வேறு நாட்டுச் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிறந்த பனிச் சிற்பங்களை இங்கே

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...