வங்கிக்
கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத் தரும்
ஏ.டி.எம், இந்த அவசர யுகத்தில் நமக்கெல்லாம்
வரப்பிரசாதம்தான். ஆனால், எந்த
ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருப்பது இயற்கைதானே?
நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தை கையாள உதவும் வகையில் சில
டிப்ஸ்கள், 'முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே
இடம்பெறுகின்றன.
தனியே... தன்னந்தனியே..!
அகால நேரங்களிலோ, மிகவும் தனிமையாக நீங்கள் இருக்கும்
நிலை ஏற்படும்போதோ ஏ.டி.எம்-மைத் தவிருங்கள். கொஞ்ச நேரம் காத்திருந்தாலும்
பரவாயில்லை... வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக
இருக்கும் ஏ.டி.எம்-களை தேர்ந்தெடுங்கள். ஒரே அறையில் இரண்டு மெஷின்கள்
இயங்கும் வசதி கொண்ட பூத்களை இரவு நேரங்களில் தவிருங்கள். ஏ.டி.எம்-மைப்
பயன்படுத்தும் ஆரம்ப காலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.
கணக்கு எங்கே... கார்டு அங்கே!
முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின்
ஏ.டி.எம்-மைப் பயன்படுத்துவதே சிறந்தது. சில சமயம் பணம் வருவதில் கோளாறு
ஏற்பட்டாலோ அல்லது பணம் வராமல், தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ
மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக
இருக்கும்.
கார்டை விட்டு கண்ணைத் திருப்பாதீர்கள்!
பெரிய கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம்
பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களிலும்,
பெட்ரோல் பங்குகளிலும் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு,
ரகசியமாகத் தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக்
கொள்வார்கள். இது சம்பந்தபட்ட ஊழியர்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் சிலரும்
சேர்ந்து செய்திருக்கும் தில்லாலங்கடி ஏற்பாடு. இதன் மூலம் உங்கள் கார்டின்
அனைத்து
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா