Oct 17, 2012

ஒலியை விட மிக அதிக வேகத்தில் பறந்த மனிதர்

Published:Monday, 15 October 2012,
விண்வெளியிலிருந்து குதித்த வீரர் பெலிக்ஸ் பௌம்கார்ட்னர் வெற்றிகரமாக பூமித்தரையை தொட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரிய பாய்ச்சல் வீரர் பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் தனது ஏழு வருட கடும் பயிற்சியின் பின்னர், பூமியின் ஓட்டிலிருந்து அதாவதுவிண்வெளியிலிருந்து பூமித்தரையை நோக்கி ஒற்றைமனிதராக குதித்து உலக சாதனை படைத்துள்ளார்.
அவர் விண்வெளியில் தனது கேப்சுலிலிருந்து குதித்து 4 நிமிடங்கள் 22 செக்கன்களில் பூமியை வந்தடைந்தார்.
விண்வெளியிருந்த குதித்ததும், அவரது பார்வை மட்டும் சிறிது மங்கலானதாக கீழே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார்.
பூமியின் தரைப் பகுதியை நெருங்கியதும் பாரசூட்டை விடுவித்த அவர் பத்திரமாக பூமி மண்ணை தொட்டார். சாதனையை முடித்த பின் பெலிக்ஸ் கூறுகையில், இது எனது ஏழுவருட உழைப்பு, எனது மிகப்பெரும் கனவு என்று தெரிவித்தார்.
அடுத்து என்ன உங்களது திட்டம் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த

woman_17 சவூதியில் அடுத்த மாதம் முதல் கோர்ட்டுகளில் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதி
ரியாத்: சவூதியில் அடுத்த மாதம் முதல் கோர்ட்டுகளில் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது. சவூதியில் அந்நாட்டு சட்டப்படி பெண்கள், கார் டிரைவிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது இவைகளில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றன. சவூதியில் கடந்த நான்கு நாட்களாக ஈத்-அல்-அதா

ஹஜ் யாத்திரை துவங்குகிறது 24ம் தேதி October 2012


hajj-yatra


துபாய்: சவுதி அரேபியாவில், ஹஜ் யாத்திரை, 24ம் தேதி, துவங்குகிறது.வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை முஸ்லிம்கள் கடமையாக கொண்டுள்ளனர். இந்தியாவிலிருந்து, இந்த ஆண்டு, 1.7 லட்சம் பேர், ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.பக்ரீத், 26ம் தேதி, கொண்டாடப்படுவதால், 24ம் தேதி முதல், புனித பயணம் துவங்குகிறது. மெக்கா, மதினா, அரபாத் மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு, லட்ச கணக்கான மக்கள் செல்ல உள்ளனர். ஏற்கனவே, சவுதியில், 12 லட்சம் பேர், குவிந்துள்ளனர்.இன்னும் பல லட்சம் பேர் வருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை சமாளிக்கவும், அசம்பாவிதம் நடக்காமல் இருக்கவும், சவுதி அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.ஹஜ் பயணிகளை கவனிக்க, சம்பந்தப்பட்ட நாடுகளின் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

அலுவலக வாடகை 50 சதவீதம் சரிவடைந்தும்…காலியாக கிடக்கும் வணிக வளாகங்கள்


பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தால், சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில், பல வணிக வளாகங்களில் அலுவலக இடங்கள் காலியாக உள்ளன. மேலும், பல பகுதிகளில் அலுவலக வாடகையும், 15-50 சதவீதம் வரை குறைந்துள்ளது.தமிழகத்தின் முக்கிய நகரங்களில், பல வணிக வளாகப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. சென்னையில், பல வளாகங்களில், ஆயிரக்கணக்கான சதுர அடி பரப்பிலான வர்த்தக இடங்கள் காலியாக உள்ளன. சென்னை, அண்ணாசாலையில், இரண்டு பாரம்பரிய திரையரங்குகளை, வணிக

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது 5 சதவீதம் குறைந்தது October 2012



oil_29புதுடில்லி : ஈரான் நாட்டில் இருந்து, சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியா மேற்கொண்ட கச்சா எண்ணெய் இறக்குமதி, முந்தைய மாதத்தை விட, 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாத இறக்குமதியுடன் ஒப்பிடும் போது, 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
நான்காவது இடம்:ஈரானில் இருந்து தொடர்ந்து மூன்று மாதங்களாக, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு காலத்தில்,

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு



  • சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2905 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.31070 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.80 க்கும், பார் வெள்ளி ரூ.62385 க்கும் விற்பனை செய்யப்பட்டது.


rs_05 அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு 33 காசுகள் அதிகரித்துள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பு 51.41 ஆக உள்ளது. நேற்றை வர்த்தக நேர முடிவின் போது ரூபாயின் மதிப்பு 42 காசுகள் அதிகரித்து 51.74 ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில அந்நிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்திருப்பதே தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதற்கு காரணம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு


நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியானதொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள்.
பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த


 சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது


தற்போதைய கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் தெண்டுல்கருக்கு ஆஸ்திரேலி யாவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலார்ட் கூறும்போது,



இந்திய கிரிக்கெட் வீரர் தெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றார்.

ஆஸ்திரேலியா அல்லாத ஒருவர் இந்த விருதை பெறுவது அபூர்வமானது. இந்த விருதை பெறும் 2-வது இந்தியர் தெண்டுல்கர் ஆவார்.

இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொரப்ஜி இந்த விருதை பெற்றார். ஆஸ்திரேலிய மந்திரி சைமன் இந்தியா வரும்போது தெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதை பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் ஆவார்.

இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு கிளைவ் லாயிடும், 2009-ம் ஆண்டு பிரைன் லாராவும் (வெஸ்ட்இண்டீஸ்) இந்த விருதை பெற்றனர்.


தெண்டுல்கர் 190 டெஸ்ட்டில் 15,533 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளார்.


டுலா: ரஷ்யாவில் பிடித்த சேனலை பார்க்கவிடாமல் தடுத்த கணவனை கோடாரியால் வெட்டி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ரஷ்யாவில் உள்ள டுலா நகரில் வசித்து வந்த தம்பதியர் திங்களன்று வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். மனைவி ஒரு சேனலையும், கணவன் ஒரு சேனலையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி சண்டை கடுமையாக மாறியது.
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து கணவனை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்தனர். அந்தப் பெண் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர். அந்த தம்பதியரின் பெயர் விபரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த இந்த கொலை சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசயத்தில் நம் ஊர் பெண்கள் பரவாயில்லை கணவனுக்கு சோறுபோடாமல்தான் டிவி பார்ப்பார்கள் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...