விளையும் இடம், நிறம், வடிவம், அதில் உள்ள டானின் என்ற வேதிப் பொருளின் அளவு என இவற்றின் அடிப்படையில் கடுக்காய் மரத்தில் பல வகைகள் இருக்கின்றன. இது இலை உதிர் வகை மரமாகும். இந்தியாவில் உள்ள மொத்தக் கடுக்காய் மரங்களில் முக்கால் பங்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெரும் அளவு கடுக்காய் மரங்கள் உள்ளன. இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும் பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப் பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது.
''மருத்துவக் குணங்கள் ஏராளமாக இருப்பதால், 'வைத்தியரின் காதலி’ (பிஷக் ப்ரியா) என்று கொண்டாடப்படுகிறது'' என்கிறார் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி உதவி விரிவுரையாளர் ஜெயா எபனேசர்.
கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.
கடுக்காய்ப் பிஞ்சு: ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய்ப் பிஞ்சைச் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை உள்ளுக்கும் வெளியிலும் பயன்படுத்தினால், மலச் சிக்கல், மூலக்கடுப்பு, ஆசனவாய் வெடிப்பு முதலியவை தீரும்.
கடுக்காய்ப் பூ: இதனைப் பொடி செய்து இரண்டு கிராம் நீருடன் அருந்த, கடுப்போடு கூடிய பேதி தீரும். பூவை அத்திமரப் பட்டையுடன் சேர்த்துப் பால்விட்டு அரைத்து இரு வேளை உண்டால், ரத்தமும் சளியும் கலந்த வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.
கடுக்காய் மரத்தின் வேர்: எலும்பைப் பற்றிய நோய்கள் தீரும்.
கடுக்காய் மரக்கட்டை: தசையைப் பற்றிய நோய்கள் தீரும்.
கடுக்காய் மரப்பட்டை : தோல் நோய்களைப் போக்கும்
No comments:
Post a Comment