சுமார் 8 மாதங்களாக 352 மில்லியன் மைல்களைக் கடந்து இவ்விண்கலமானது
கடந்த 5 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள்
தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்வதே 'கியூரியோசிட்டி'யின் பிரதான இலக்காகும்.
'கியூரியோசிட்டியின்' தெளிவான இப்புகைப்படங்கள் செவ்வாய்க் கிரகத்தினை எம் கண்முன்னே நிறுத்துகின்றது.
இதனைத் தவிர அவ்விண்கலமானது தனது புகைப்படத்தினையே அதாவது
விண்கலத்தின் புகைப்படத்தினையும் அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகள் விண்கலத்தின்
பாகங்களின் நிலைகுறித்துத் தெரிந்துகொள்ளவே இதனை அது அனுப்பியுள்ளது.
இதேவேளை கியூரியோசிட்டியின் மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment