Sep 18, 2012

நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதிக்கான 29 புதிய மரபணுக்கள் கண்டுபிடிப்பு



மனிதர்களில் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதி மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ். இந்த வியாதி, நரம்பிழைகளை சூழ்ந்து அதற்கு பாதுகாப்பு அளிக்கும் மைலின் ஷீத் என்ற பாதுகாப்பு வளையத்தை தாக்கி நரம்பின் பணிகளை முடக்குகிறது. இதனால் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளான பார்த்தல், நடத்தல், எண்ணுதல் மற்றும் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வியாதியால் உலகம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் பேருக்கும் மேல் அவதியுறுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், நோயால் பாதிக்கப்பட்ட 9,772 நபர்களின் 6 இலட்சம் மரபணு பகுதிகள் சோதனை செய்யப்பட்டன. பின்னர் இவை ஆரோக்கியமான 17 ஆயிரம் பேரிடம் ஒப்பீடு செய்யப்பட்டன. இதில், முன்பு கண்டறியப்பட்ட 23 மரபணுக்களோடு மேலும் புதிதாக 29 மரபணுக்கள் கண்டறியப்பட்டன. இவை நோய் எதிர்ப்பு சக்தியோடு தொடர்புடையவை. மரபணுவியலின் புதிய பரிணாமமாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவானது, வருங்காலத்தில் நோய் உருவாவதை முற்றிலுமாக தடுக்கவும் மற்றும் புதிய சிகிச்சை முறைகளும் ஏற்பட வழிவகுக்கும் என தெரிய வருகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...