Sep 18, 2012

உலகளவில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது இந்தியர்களே: உலக சுகாதார அமைப்பு




லக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வொன்றில் அதிக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர்களில் இந்தியர்களே அதிகம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஏறத்தாழ 18 நாடுகளை சேர்ந்த 89 ஆயிரம் பேரிடம் சுமார் 20 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். உலகளவில் மன அழுத்தத்திற்கு 12.1 கோடி பேர் பாதிப்படைகின்றனர். இதில் இந்தியர்கள் மிக அதிக அளவாக 36 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. மிக குறைவாக சீனர்கள் (12 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று பாதிப்படைவோரின் சராசரி வயது இந்தியர்களுக்கு 31.9 ஆகவும், சீனர்களுக்கு 18.8 ஆகவும் மற்றும் அமெரிக்கர்களுக்கு 22.7 ஆகவும் உள்ளது. இந்த பாதிப்பிற்கு காரணமாக சோகம், மகிழ்ச்சியின்மை, குற்ற உணர்ச்சி அல்லது குறைந்த சுய மதிப்பீடு, தூக்கம் பாதிப்பு, குறைந்த ஆற்றல் மற்றும் கவனக்குறைவு ஆகியவை கூறப்படுகின்றன. மேலும், கணவன் இறந்து போதல் அல்லது விவாகரத்து போன்ற காரணங்களால் பெண்களிடம் பாதிப்பின் தன்மை இரு மடங்காக காணப்படுகிறது. இதனால் 15 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களின் வாழ்நாள் குறைவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...