Sep 18, 2012

வயது தொடர்பான பார்வை குறைபாட்டை குறைக்கும் மீன் உணவு



வயதாகும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அதில் பார்வை குறைபாடும் அடங்கும். வயதாகும் காலத்தில், பார்ப்பதற்கு உதவும் ரெடினா எனப்படும் விழித்திரையின் ஒரு பகுதியான மெகுலாவின் பெரும்பான்மையான செல்கள் இறந்து போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் பார்வை குறைபாடு மருத்துவ உலகில் ஏ.எம்.டி. அதாவது ஏஜ் ரிலேடட் மெகுலார் டீஜெனரேசன் என அழைக்கப்படுகிறது. இக்குறைபாடு, பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டனில் இந்த வியாதியால் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஹார்வர்டு மெடிகல் ஸ்கூலில் மருத்துவராக உள்ள வில்லியம் கிறிஸ்டென் என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வில், வாரத்திற்கு இரு முறை என்ற அளவில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவை எடுத்து கொள்வது பலன் தரும் என தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...